5841. பரேதான் கமலமுனி வயதேதென்றால் பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நேரேதான் வயததுவும்
நாலாயிரந்தான் நேர்மையுடன் முந்நூற்றச் சொச்சமாகும்
சீரேதான் சீனபதி தன்னிலப்பா
சிறப்புடனே நெடுங்காலமிருந்தசித்து
தீரேதான் சமாதிமுகந்
தன்னிற்சென்று தீர்க்கமுடன் இருநூறு வாண்டுதானே
விளக்கவுரை :
5842. ஆண்டான வருஷமது இருநூரப்பா
வப்பனே பூமிதனி லிருந்தசித்து
கூண்டான கூண்டோடு வந்தசித்து
குவலயத்தில் இவர்போலுஞ்சித்துமுண்டோ
தாண்டவம்போல் சீனபதி
தேசந்தன்னில் சாங்கமுடன் வினோதங்கள் செய்தசித்து
ஆண்டகையாம் ஆனதொரு
கமலர்தானும் வப்பனே வையகத்து சித்துமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5843. ஆச்சப்பா இன்னமொரு
மகிமைசொல்வேன் வப்பனே யதிசயங்கள் மெத்தவுண்டு
மாச்சலுடன் வையகத்தில்
இருந்தசித்து மகத்தான அறிவானந்த சித்துதானும்
பாச்சலுடன் வயததுவும்
ஏதென்றாக்கால் பண்பான முந்நூற்று வறுபதாண்டு
மூச்சடங்கி சமாதிதனில்
இருந்தசித்து மூர்க்கமுடன் பனிரெண்டு வருஷங்காணே
விளக்கவுரை :
5844. காணவே பனிரண்டாண்டுமட்டும்
காசினியில் பூமிதனில் இருந்தசித்து
தோணவே கௌபாலர் சீஷனாகும்
தொல்லுலகில் இவர்மகிமை மெத்தவுண்டு
பூணவே வையகத்து மாண்பருக்கு
புகழாக முன்னடந்தகாரியத்தை
வேணபடி சன்னதங்கள்
கொண்டாற்போலே விட்டகுறை இருந்தபடி சொல்வார்பாரே
விளக்கவுரை :
5845. சொல்லவே யின்னமொரு
மார்க்கங்கேளு தூய்தான வகப்பேயர் சித்துதாமும்
வெல்லவே யவர்தமக்கு
வயதேதென்றால் விருப்பமுடன் சொல்லுகிறேன் வியனுந்தானும்
புல்லவே நூற்றுபத்து ஒன்றுமூன்று
புகழான மரத்தடியில் இருக்குஞ்சித்து
நல்லதொரு சமாதிமுகஞ்
சென்றதில்லை நாதாந்த அகப்பைவெளி சித்துதானே
விளக்கவுரை :