5846. வெளியான சித்துக்கு
குருவேதென்றால் விருப்பமுடன் வியாசமுனி யென்னலாகும்
ஒளிவாக காயாதி தானுமில்லை
ஓகோகோ வுலகமதில் வாழுஞ்சித்து
களியான ஜோதியென்ற
விருட்சந்தன்னில் கைலாசநாதரைப்போல் சமாதிகொண்டு
வளியான மரப்பொந்தில்
தானொடுங்கி மகத்தாக இருந்ததொரு சித்துமாச்சே
விளக்கவுரை :
5847. சித்தான சித்துனுட
மார்க்கஞ்சொல்வேன் சீரான புலிப்பாணி மன்னாபாரு
முத்தான பாம்பாட்டி
வயதேதென்றால் மூதுலகில் பெயர்கொண்ட நெடியசித்து
புத்தியுள்ள சித்துக்கு
வயதுசொல்வேன் புண்ணியனே நூற்றிருபத்துமூன்று
சுத்தமுடன் பாம்பினது
விஷத்தைவாங்கி துப்புரவாய் அருந்துகிற சித்துகேளே
விளக்கவுரை :
[ads-post]
5848. கேளேதான் காயாதிகற்பங்கொண்டு
கீர்த்தியுடன் சிலகால மிருந்தசித்து
பாளேதான் போகாமல் தேகந்தன்னை
பட்சமுடன் காப்பாற்றி பந்துகொண்டு
நீளேதான் திருவாத்தி
மரத்தின்கீழே நீதியுடன் கொலுவிருந்த காயசித்து
ஆனேதான் கோகர்ண சித்துமல்ல
வப்பனே சின்மயத்தின் சித்துபாரே
விளக்கவுரை :
5849. பாரேதான் இன்னமொரு மார்க்கம்பாரு பட்சமுள்ள எந்தனது பாலாகேளு
சீரேதான் காலகண்ட
வயதேதென்றால் சிறப்பான வாயிரமா மிருநூறாண்டு
நேரேதான்
நெடுங்காலமிருந்தசித்து நேர்மையுடன் குளிகையது பூண்டசித்து
ஊரேதான் பெயரேது
சொல்லவென்றால் வுத்தமனே சேஷனால் முடியாதென்றே
விளக்கவுரை :
5850. அன்றான ஆதிசேடன் தன்னினாலும்
வப்பனே கூறுதற்கு முடியாதப்பா
குன்றான நெடுமலைகள்
வனாந்திரங்கள் கொற்றவனே நெடுங்கால மறிந்தசித்து
தென்றிசையில்
தெட்சிணாமூர்த்தினாயன் சிறப்பான சித்துமகா சீஷனுக்கு
வென்றிடவே யுபதேசஞ்
செய்தசித்து விட்டகுறை யிருந்ததொரு காலர்தாமே
விளக்கவுரை :