5851. காலனாம் நெடுந்தூத காலசித்து
காசினியில் சமாதிமுகம் செல்வதற்கு
பாலகனாம்
சீஷவர்க்கமாண்பர்தம்மை பட்சமுடன் தாமழைத்த சித்துதாமும்
சீலமுடன் முப்பத்து
வாறுவாண்டு சிறப்புடனே வையகத்தில் இருந்தசித்து
கோலமுடன் முகமறியா பாலசித்து
கொற்றவனே வெகுகால மிருந்தசித்தே
விளக்கவுரை :
5852. சித்தான சித்தனிட மார்க்கஞ்
சொன்னேன் சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா
மயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங்
கணக்கோயில்லை சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழிகொண்டசித்து
சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே
விளக்கவுரை :
[ads-post]
5853. என்னவே சிவசுப்பிரமணியரான
யெழிலான சித்துக்கு வயதோயில்லை
பன்னவே பலசாஸ்திர நூல்கள்
தன்னில் பாகமுடன் வயததுவுங்கூறவில்லை
சொன்னபடி சுருதிமுறை
வேதாகமங்கள் தோற்றமுடன் பலபேரும் பாடிவைத்தார்
நன்னயமாய் சுப்பிரமணியர்
காப்பேயென்று நாட்டினார் நூல்களெல்லாம் நாட்டினாரே
விளக்கவுரை :
5854. நாட்டினதோர் நாமமதைக்
கண்டதல்லால் நாதாந்த வயததுவைக்கண்டதில்லை
தாட்டிகமாய் யின்னம்மொரு
வயணஞ்சொல்வேன் தயாளமுள்ள சிறுபாலாசாற்றக்கேளிர்
வாட்டமுடன் யூகியென்ற
முனிவர்தானும் வகுப்பான வயததுவும் ஏதென்றாக்கால்
மாட்டிமையாய் அறுநூற்று
யெண்பதாண்டு மார்க்கமுடன் வையகத்து சித்துபாரே
விளக்கவுரை :
5855. பாரேதான் நீலகண்ட
ரிஷியார்தம்மால் பாருலகில் உபதேசம் பெற்றசித்து
நேரேதான் சமாதிமுகந்
தன்னிற்சென்று நேர்மையுடன் இருபத்தோர் ஆண்டுமட்டும்
தீரேதான் சமாதிமுகம்
இருந்துமல்லோ தீர்க்கமுடன் வையகத்தில் வந்தசித்து
பேரேதான் நூல்தனிலே
யூகியென்றும் பேருலகில் கீர்த்திபெற்ற சித்துதாமே
விளக்கவுரை :