5856. தாமான சாத்திரங்கள்
அழிந்தசித்து தாரிணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோமான்கள் உபதேசம்
பெற்றசித்து குவலயத்தில் இவர்போலும் யாருமுண்டோ
பூமான்களானதொரு
மாண்பரெல்லாம் புகழ்ச்சியுடன் இவர்பாதம் புகழுஞ்சித்து
சாமான்யமானதொரு சித்துபோல
சட்டமுடன் வையகத்திற் காணார்தாமே
விளக்கவுரை :
5857. தானான இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள பூபாலா மணியேகேளிர்
பானான திரணாக்கிய
முனிவர்தானும் பாருலகில் நெடுங்காலமான சித்து
கோனான வயததுவும்
ஏதென்றாக்கால் கொற்றவனே துலாயிரத்து எண்பதாண்டு
மானான சமாதிமுகஞ்
சென்றசித்து மார்க்கமுடன் இருபத்திரண்டுதானே
விளக்கவுரை :
[ads-post]
5858. ஆண்டான வருஷமது
இருபத்திரண்டு வப்பனே சமாதிமுகம் இருந்தசித்து
பாண்டவர்கள்
ஐவருங்காணாமுன்னே பாருலகில் வெகுகால மிருந்தசித்து
தாண்டவம்போல் ஜெமதக்கினி
முனிவர்தானும் தாரிணியில் பெற்றெடுத்த சித்துவாகும்
மாண்டதொரு மாண்பரெல்லாம்
வையகத்தில் வாழ்த்தியல்லோ வஞ்சலிகள் செய்தசித்தே
விளக்கவுரை :
5859. சித்தான சித்துமுனி
இவர்தானப்பா சீருலகில் ரிஷிவர்க்கக் கூட்டத்தோடு
முத்திபெற நல்வழிக்கு
உறுதிகொண்டு மூதுலகில் சின்மயத்தை மனதிலுன்னி
சத்தியுடன் மனோன்மணியை
தியானித்தேதான் சதாகால நிஷ்டைகுறிகளங்கனாதி
புத்தியுடன் வையகத்தில்
தவசியாகி பொன்னுலகுபதிதனிலே சேர்ந்தார்காணே
விளக்கவுரை :
5860. சேரவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் செம்மலுடன் புலிப்பாணி மைந்தாகேளு
வாரமுடன் சண்டீசுவரர்
வளமைகேளும் வண்மையுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
தீரமுடன் நானூற்றியறுபதாகும்
தீர்க்கமுடன் அவர்நூலில் சொன்னநீதி
சாரமுடன் சமாதிமுகஞ்
சென்றசித்து சாங்கமுடன் வையகத்து சித்துகாணே
விளக்கவுரை :