போகர் சப்தகாண்டம் 5861 - 5865 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5861 - 5865 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5861. காணவே சமாதிமுகம் பத்துரெண்டு கருவாக ஒன்றுடனே தானுங்கூட்டி
பூணவே பூமிதனில் இருந்தசித்து பொங்கமுடன் ஞானமென்ற கிரியாசித்து
நீணவே நாலுயுக வதிசயங்கள் நீடாழி யுலகுபதி யறிந்தசித்து
சீனமது இல்லாமல் நெடுங்காலந்தான் சீவனோடிருந்ததொரு சித்துமாச்சே

விளக்கவுரை :


5862. ஆச்சப்பா யின்னமொரு முறைமைசொல்வேன் வப்பனே செங்கனிவாய்க்கொண்டபாலா
ஏச்சலது வாராமல் இருந்தசித்து எழிலான திருமூலரென்னலாகும்
பாச்சலென்ற வயததுவும் ஏதென்றாக்கால் பாரினிலே வாயிரத்து சொச்சமாகும்
மூச்சடங்கி சமாதிமுகந் தன்னிலப்பா மூதுலகில் நெடுங்காலமிருந்தசித்தே

விளக்கவுரை :

[ads-post]

5863. நெடுங்காலம் சமாதிமுகந் தன்னில்தானும் நேர்மையுடன் அறுபது வருஷமாண்டு
கடுந்தவசி யாயிருந்த சித்துதாமும் கண்டுகொள்ளா வதிசயங்கள் மெத்தவுண்டு
படுந்துயரந் தானறியா மாண்பர்க்கப்பா பாரினிலே நிதிகொடுத்து வதிதஞ்செய்தார்
கடுவாதி தமைக்கண்டு நிர்த்தஞ்சொல்லி துப்புரவாய் விதியுரைத்து வழிசொல்வாரே

விளக்கவுரை :


5864. வழியான முறைபாடு தாமுரைத்து வண்மையுடன் உபதேசங்கூறியல்லோ
பழியான வார்த்தைக்கு ஆளாகாமல் பாருலகில் சித்துவிளையாடச்சொல்லி
முழியான வார்த்தையது வுபதேசங்கள் மூர்க்கமின்றி தானுரைக்கும் ஞானசித்து
சுழியான வாசிநிலை தனிலிருந்து சுத்தமுடன் வையகத்தில் இறந்தார்தாமே

விளக்கவுரை :


5865. இறந்தாரே இன்னமொரு மார்க்கங்கேளு எழிலான பதினெண்பேர் முனிவர்தானும்
பிறந்ததொரு வளப்பங்கள் யாவுங்கண்டு பேரின்பநிலைதனிலே மனதிலுன்னி
சிறந்ததொரு நட்சத்திரயோகங்கண்டு சீரான பிதங்கள் தான்வகுத்து
துறந்துமே நவகோடி ரிஷிகள்தானும் துப்புறவாய் நாற்பத்தி எண்பேர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar