போகர் சப்தகாண்டம் 5866 - 5870 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5866 - 5870 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5866. பேரான யிவர்களது பிறப்புதானும் பேரின்ப நட்சத்திர கால்தான்கூட்டி
சீரான சீனபதிமாண்பருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தநூலாம்
கூரான வையகத்து மாண்பரெல்லாம் குறிப்புடனே தானறியமனதுவந்து
வீரான போகரேழாயிரத்தை விருப்பமுடன் உபதேசஞ் செய்திட்டேனே

விளக்கவுரை :


5867. செய்தேனே புலிப்பாணி மைந்தாகேளு செங்கமல கரத்தானே யின்னஞ்சொல்வேன்
மெய்யான வேதமிது சத்தகாண்டம் மேதினியில் சகலகலைக் கியானமெல்லாம்
பையவே வடநூலைத் தானாராய்ந்து பாடினேன் காண்டமது ஏழாயிரந்தான்
துய்யதமிழ் பரிபாஷைத் தன்னைநீக்கி துப்புறவாய் ஓதிவைத்தேன் காண்டந்தானே

விளக்கவுரை :

[ads-post]

5868. காண்டமேழாயிரம் பெருநூலப்பா கருவிகரணாதிமுதல் இதிலடக்கம்
பூண்டமன துறுதியினால் இந்தநூலைப் புகட்டினேன் காலாங்கி கடாட்சத்தாலே
வேண்டியதோர் சீனபதி கருமானங்கள் வேற்றுருவ மில்லாமல் கூறினேன்யான்
ஆண்டகையாம் எந்தன்குரு நாதன்தன்னால் அப்பனே பாடிவைத்த நூலிதாமே

விளக்கவுரை :


5869. நூலான நூலிதுதான் நுணுக்கமெத்த நுட்பமுடன் காலாங்கி பிறந்தவண்ணம்
பாலான சித்திரையாம் மாதமப்பா பாங்கான வசுவினியாம் நாலாங்காலாம்
சேலான ஜெகத்குரு மைந்தனப்பா செயலான பாக்கியமும் பெற்றமைந்தன்
காலான காலாங்கி நாதரப்பா காசினியில் வந்துதித்த வுருவுமாச்சே  

விளக்கவுரை :


5870. உருவான மார்க்கமது இன்னஞ்சொல்வேன் உத்தமனே போகாது பிறப்புநேர்மை
உருவான மாதமது வைகாசியப்பா கருத்தான பரணியது ரெண்டாங்காலாம்
குருவான பஞ்சணத்தில் ஒருவனப்பா கொற்றவனே விசுவகர்மன் மைந்தனாகும்
திருவான போகரிஷி என்றுமல்லோ செப்பினார் பலநூல்கள் வேதமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar