போகர் சப்தகாண்டம் 5871 - 5875 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5871 - 5875 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5871. வேதமா மின்னமொரு மாசர்க்கங்கேளு வெளியான புலிப்பாணி மைந்தாபாரு
போதமாம் ரோமரிஷி பிறந்தநேர்மை புகலுகிறேன் மாணாக்கள் அறியவென்று
நீதமுடன் ஆணியாந் திங்களப்பா நிஷ்களங்கமான கார்த்திகைதானாகும்
வீதமுடன் பயனறிய மூன்றாங்காலாம் விற்பரனார் பிறந்ததொழி நாளுமாச்சே

விளக்கவுரை :


5872. ஆச்சப்பா செம்படவன் தன்னையப்பா வப்பனே மாதுருவுங் குறத்தியாகும்
பாச்சலுடன் பலநூலுங் கண்டாராய்ந்து பாடிவைத்த மரபதுவும் மெய்யேயாகும்
மாச்சலுடன் இருகுலத்தார் பெற்றமைந்தன் மகத்தான ரோமரிஷி யென்னலாகும்
மூச்சடங்கி சென்றதொரு கானீனப்பா மூதுலகில் சென்றதொரு சித்துமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5873. சித்தான மார்க்கமது இன்னஞ்சொல்வேன் சீர்பாலா எந்தனிருகண்ணேகேளும்
பத்தியுள்ள மச்சமுனி பிறந்தநேர்மை பாங்குடனே யாடியாந்திங்களப்பா
சத்தியுடன் ரோகனியாம் முதற்காலப்பா சாங்கமுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
புத்தியுள்ள ஆதுலமாங் குலத்துதித்த புகழான கன்னியுட மைந்தனாமே

விளக்கவுரை :


5874. ஆமேதான் மச்சமுனி அடவுசொன்னேன் வன்பான புலிப்பாணி மைந்தாகேளு
நாமேதான் சொன்னபடி சட்டநாதர் நன்மையுடன் பிறந்ததொரு நேர்மைதானும்
போமேதான் ஆவணியாந் திங்களப்பா பொங்கமுடன் மிருகசீரிடமுமாகும்
வேமேதான் விட்டகுறை மூன்றாங்காலாம் விருப்பமுடன் அவதரித்த பாலனாமே

விளக்கவுரை :


5875. பாலனாஞ் சிங்களவ தேவதாசி பட்சமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டமுனி என்றுசொல்லி சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு
கோலமுடன் யின்னமொரு மார்க்கம்பாரு கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
தாலமுடன் இடைக்காடர் பிறந்தநேர்மை சட்டமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar