போகர் சப்தகாண்டம் 5876 - 5880 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5876 - 5880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5876. தண்மையாம் புரட்டாசி மாதமப்பா தாழ்வாக இரணியனைக் கொன்றமாதம்
வண்மையாந் திருவாதிரை ரெண்டாங்காலாம் வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன்தான்
பெண்மையாக கானகுறை சாதியப்பா பேரான கானீனன் பெற்றபிள்ளை
திண்மையாம் இடைக்காடர் தானுமாகும் தீர்க்கமுடன் பூவுலகில் இருந்தசித்தே

விளக்கவுரை :


5877. சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் திரளான நவகோடி ரிஷிகள்தன்னில்
புத்தியுள்ள தன்வந்திரி பகவான்தானும் பூபாலரானதொரு மாயாசித்து
சத்தியுள்ள மகாவிஷ்ணு வென்றேசொல்வார் தாரிணியில் மானிடமாஞ் சித்துவாகும்
முத்திபெற வைப்பசியாந் திங்களப்பா முனையான புனர்பூசம் நாலாங்காலே

விளக்கவுரை :

[ads-post]

5878. காலான தன்வந்திரி பிறந்தநேர்மை காசினியில் இவர்நூலில் சொன்னவாறு
நூலான பலநூலிற் கண்டாராய்ந்து நுட்பமுடன் பாடிவைத்தேன் குருநூலாகும்
பாலான யிருப்பிரப்பாளரப்பா பாங்கான அனுலோமன் பெற்றபிள்ளை  
சாலான சாத்திரங்கள் யாவுங்கூறும் சகலவித பண்டிதருங் காணார்தாமே

விளக்கவுரை :


5879. கண்டேனே நிர்வாண பாஷையப்பா காசினியில் சமஸ்கிருத பாஷையாலும்
விண்டதொரு இத்தாலிபாளபந்து விருப்பமுடன் பாகவதபாஷையாலும்
கொண்டேனே மனத்துறுதி யடியேன்தானும் கொற்றவனே குவலயத்தில் கண்டாராய்ந்து
விண்டுமி யானுரைத்தேன் விஷ்ணுகாதை விளம்பிட்டேன் சத்தகாண்டம் உண்மைதானே

விளக்கவுரை :


5880. தானான யின்னமொரு மார்க்கம்பாரு தயவான புலிப்பாணி மகனேகேளு
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் தானுரைத்த வுளவுகண்டேன்
பானான மூலத்தின் ஈசரப்பா பண்புடனே பிறந்ததொரு நேர்மைதானும்
மானான கார்த்திகையாந் திங்களப்பா மகத்தான பூசமது மூன்றாங்காலே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar