போகர் சப்தகாண்டம் 5881 - 5885 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5881 - 5885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5881. மூன்றான பாதமது மூலத்தீசர் முனையாக பிறந்ததொரு நேர்மையப்பா
சான்றவரா மூலத்தினீசரப்பா சட்டமுடன் வந்துதித்த நாளுமாகும்
ஈன்றதொரு ஜாதியிலே பள்ளஜாதி எழிலான கன்னிகையும் பெற்றபிள்ளை
மேன்மையுடன் தான்பிறந்தார் மூலத்தீசர் மேதினியில் ரிஷிதனக்குப் பிறந்தார்தாமே

விளக்கவுரை :


5882. பிறந்ததொரு யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பேரான புலிப்பாணி மைந்தாபாரு
சிறந்ததொரு அகத்தீசர் பிறந்தநேர்மை சிறப்பான தனுர்மாத மென்னலாகும்
துறந்ததொரு ஆயில்யம் மூன்றாம்பாதம் துப்புறவாய் அவர்பிறந்த நாளுமாச்சு
கறந்ததொரு பால்பசுவும் கன்னுமாகி காசினியில் பிறந்ததொரு சித்துமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5883. ஆச்சப்பா அகத்தியரின் பிறப்புநேர்மை அவனிதனில் ஆராலும் முடியாதப்பா
மூச்சடங்கி மலையின் மேல்நின்றசித்து முனையான கமலமதில் பிறந்தசித்து
மாச்சலுடன் தேவரிஷி வரத்தினாலே மகாதேவர் வந்துதித்த குருவுமாகும்
ஏச்சலது வாராத கும்பயோனி எழிலான அகஸ்தியரென் றரையலாமே  

விளக்கவுரை :


5884. அறையவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் வன்பான கண்மணியே சொல்லக்கேளிர்
நிறையவே சிவவாக்கியர் பிறந்தநேர்மை நீதியுடன் சொல்லுகிறேன் நிறைவாய்க்கேளு
குறையாத தைமாதம் மகத்திலப்பா கொற்றவனே ரெண்டாங்கால் என்னலாகும்
மறையவே திருமூல கூட்டத்தாரில் மகத்தான கன்னியது பிள்ளையாமே

விளக்கவுரை :


5885. பிள்ளையாஞ் சிவவாக்கிய ரென்னலாகும் பேரான திருமூலர் மரபிலுள்ள
வள்ளலெனுஞ் சேய்மடவார் கன்னிதன்னின் மகத்தான சிவவாக்கியராகும்பாரு
தெள்ளுதமிழ் கவிவாணர் இவர்க்கீடுண்டோ செந்தமிழின் சுவையறிந்த சிவவாக்கியர்தான்
கள்ளமது வாராத புனிதபாலன் காசினியில் அவதரித்த வுருவுமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar