5886. உருவான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் வுத்தமனே சிகாமணியே யுண்மைபாரீர்
திருவான ராமரென்ற தேவரப்பா
தீர்க்கமுடன் வந்துதித்த நேர்மைகேளிர்
கருவான மாசியென்ற திங்களப்பா
கடியதோர் பூரமது ரெண்டாம்பாதம்
அருவமுள்ள ராமரென்ற
தேவர்தானும் வப்பனே வந்துதித்த நாளுமாச்சே
விளக்கவுரை :
5887. நாளான நாலாங்கால் என்னலாகும்
நலமான ராமதேவர் பிறந்தநாளாம்
ஆளான ரோமரிஷி பாட்டனுக்கு
அழகாக வந்துதித்த ராமதேவன்
கோளான நூல்களிலே
குற்றஞ்சொல்வார் குறையான முறைப்பாடு யேதுஞ்சொல்வார்
பாளான நூல்தனிலே சொல்லாதாலே
பட்சமுடன் யானுரைத்தேன் பண்பாய்க் கேளே
விளக்கவுரை :
[ads-post]
5888. பண்பான யின்னமொரு
மார்க்கம்பாரு பாலகனே ஐந்தறிவிற் சிறந்தபாலா
திண்பான புஜண்டருட மார்க்கஞ்
சொல்வேன் தீர்க்கமுடன் பங்குனியாந் திங்களப்பா
கண்பான வுத்திரமாம்
இரண்டாம்பாதம் காசினியில் வந்துதித்த திருவுமாச்சு
மண்பான வரரிஷியின் சாபத்தாலே
மார்க்கமுடன் அவதரித்த பாலனாமே
விளக்கவுரை :
5889. பாலனாஞ் சந்திரகுலம் விளங்கவந்த பாரினிலே வெள்ளாட்டி பெற்றமைந்தன்
மாலான ரதிகேளி மடந்தையாகும்
மகத்தான வருந்துதியு மென்னலாகும்
சேலான பாக்கியமும்
பெற்றபாலன் செம்மலுடன் சாபத்தால் வரத்தில்வந்து
தாலான தவசியென்ற நாமம்பெற்று
தாரிணியில் புஜண்டரென்ற பேருண்டாச்சே
விளக்கவுரை :
5890. பேரான யின்னமொரு
வழிதான்சொல்வேன் பேருலகில் கீர்த்திபெற்ற புனிதவானே
சீரான கருவூரார்
பிறந்தநேர்மை செப்புகிறேன் செம்பவள வாயாகேளிர்
கூறான சித்திரையாம் மாதமப்பா
குறிப்பான வஸ்தமது ரெண்டாம்பாகம்
தேறான நாட்களிலே
பிறந்தசித்து தேற்றமுடன் கருவூரார் என்னலாமே
விளக்கவுரை :