போகர் சப்தகாண்டம் 5891 - 5895 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5891 - 5895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5891. ஆமேதான் தேவதத்தன் என்றுசொல்லி வப்பனே யவன்மைந்தன் மயன்என்பார்கள்
நாமேதான் சொன்னபடி மயனுக்கல்லோ நாடானக் கருவூரார் பிறந்தாரல்லோ
போமேதான் பொன்னுலகர் தேவதச்சர் பொங்கமுடன் கருவூரார்க் கீடுமல்ல
ஆமேதான் பாண்டியர்க்கு வுருவுசெய்து வப்பனே தான்கொடுத்த சித்துதாமே

விளக்கவுரை :


5892. தாமாக யின்னமொரு வழிபாடல்லோ சாற்றுகிறேன் புத்தியுள்ள பூபாலாகேள்
கோமானகள் அறிந்ததில்லை சாத்திரதோஷம் கொற்றவனே யாம்கண்ட வரைக்குஞ் சொல்வோம்
சாமான்ய மென்றதொரு புண்ணாக்கீசர் தாரணியில் வந்துதித்த நேர்மைசொல்வேன்
பூமான்கள் ஆரேனும் அறிந்ததுண்டோ புகட்சியுடன் கூறுகிறேன் புனிதவானே 

விளக்கவுரை :

[ads-post]

5893. புனிதமாம் வைகாசி மாதமப்பா புகழான புண்ணாக்கு ஈசர்தாமும்
வனிதமுடன் சித்திரையாம் இரண்டாம்பாதம் மகத்தான புண்ணாக்கர் பிறந்தநாளாம்
சனியிராகுடன் கூடிப்பிறந்ததாலே சாங்கமுடன் தேவரிஷி தன்னைப்போல
மனிதனாய் அவதாரம் எடுத்து மாட்டிடைச்சி யமங்கலியின் பிள்ளையாமே

விளக்கவுரை :


5894. பிள்ளையாயின்னமொரு பாகஞ்சொல்வேன் பேரான கண்மணியே புகலக்கேளிர்
எள்ளலவு பிசகாத புலிப்பாணி யுன்னை யேற்றமுடன் சொல்லுகிறேன் எழிலாய்க்கேளு
உள்ளபடி நீபிறந்த மாதமப்பா வுத்தமனே புரட்டாசி யென்னலாகும்
கள்ளமிலா ஜொதியென்ற நாலாங்காலாம் கருத்துடனே யவதரித்த சித்துமாச்சே

விளக்கவுரை :


5895. ஆச்சப்பா வேடர்குலம் வந்துதித்த வப்பனே கன்னிகழியாத மங்கை
மூச்சடங்கி கானகத்தில் தவசியாக மூர்க்கமுடன் இருந்த ரிஷியாரோடு
பேச்சுகளும் மிகப்பேசி வாதுகூறி பேரான நவகண்ட ரிஷிதானப்பா
பாச்சலுடன் கன்னிகையைச் சேர்ந்துமல்லோ பாலகனே பெற்றெடுத்த சிசுதானீயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar