5896. சிசுவான பாலகனே நீதானப்பா
சிறப்பான காலாங்கி கடாட்சத்தாலே
பசுபோலே வேங்கைதனை
வாகனமுமாக்கி பாரினிலே சுற்றிவந்த பாலனாகும்
நிசிதமுடன் எந்தனுக்கு
சீஷனாக்கி நிஷ்களங்கமானதொரு புத்திவானாய்
விசுவாசமுள்ள தொரு பாலனாக
மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
விளக்கவுரை :
5897. சித்தான யின்னமொரு குறிதான்சொல்வேன் சிறப்பான புலிப்பாணி மகனேகேளாய்
முத்தமுடன் நந்தீசர்
பிறந்தநேர்மை மூதுலகோர் தானறிய சொல்வேனப்பா
நித்தமது வைகாசி மாதமப்பா
நீடான விசாகமது நாலாங்காலாம்
பத்தியுடன் தான்பிறந்த
நந்திதேவர் பாரினிலே தேவஸ்தான குருவுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5898. குருவான தேவதாஸ்தலங்கள்
தன்னில் கொற்றவனே நந்தியென்ற பேருண்டாச்சு
அருவான தேவேந்திரன்
சாபத்தாலே வப்பனே பிரம்மகுலந் தனிலுதித்து
உருவாகி மானிட ஜென்மமாகி
வுத்தமனே கன்னியது வயிற்றிறங்கி
திருவான நந்திரூபங்
கொண்டுமல்லோ சிறப்புடனே வந்துதித்த சித்துதானே
விளக்கவுரை :
5899. சித்தான யின்னமொரு
மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மைந்தாகேளு
புத்தியுள்ள புலஸ்தியனார்
பிறந்தநேர்மை பூதலத்தில் எவராலும் கூறப்போமோ
முத்திதரும் ஆவணியாந்
திங்கள் தன்னில் முனையான அனுஷமாம் நாலாங்காலில்
பத்தியுடன் பிறந்தாரே
புலஸ்தியர்தானும் பாரினிலே வந்துதித்த வுருவுமாச்சே
விளக்கவுரை :
5900. உருவான புலஸ்தியரின்
மார்க்கங்கேளு ஓகோகோ நாதாக்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன்வரத்தால்
கமலமுனி தன்வயிற்றிற் பிறந்தபேரன்
திருவான
வகஸ்தியருக்குகந்தசீஷன் தீர்க்கமுள்ள சிவராஜ புனிதயோகன்
பருவான திருமந்திர
வுபதேசந்தான் பாருலகில் புலஸ்தியரென் றறையலாமே
விளக்கவுரை :