போகர் சப்தகாண்டம் 5901 - 5905 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5901 - 5905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5901. அறையலாம் இன்னமொரு மார்க்கம்பாரு வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நிறையனே வேதமென்ற வியாசர்தானும் நேர்மையுடன் தான்பிறந்த சேதிவண்ணம்
மறைபோன்ற வாணியாந் திங்களப்பா மகத்தான கேட்டையது ரெண்டாங்கால்தான்
குறைபோன்ற நாளதனில் உதித்தபாலன் கொற்றவனார் வேதமென்ற வியாசர்தானே

விளக்கவுரை :


5902. தானான பராசரது மைந்தனப்பா தாக்கான வியாசனென்றே செப்பலாகும்   
கோனான நூற்படியே யானுரைத்தேன் கொற்றவனார் மாண்பரிடம் அறியவேண்டி
பானான யின்னமொரு பதமுஞ்சொல்வேன் பாரினிலே மாண்பர்களுந் தெரியவேண்டி
மானான புலிப்பாணி யுந்தமக்கு மார்க்கமுடன் முறைபாடு சொல்லலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5903. சொல்லவென்றால் தேறையர் மார்க்கஞ் சொல்வேன் சுந்தரனே பங்குனியாந்திங்களப்பா
வெல்லவே மூலமது ரெண்டாங்காலாம் மேன்மையுடன் அவதாரஞ் செய்தாரப்பா
புல்லவே தேரையர் முனிவர்தானும் புகழான பிரம்மகுலந் தன்னிலப்பா
வெல்லவே வானரிஷி தன்தனக்கு சிறப்புடனே பெற்றெடுத்த பாலனானே 

விளக்கவுரை :


5904. பாலனாந் தேரையர்முனிவர்தானும் பண்பான வகஸ்தியருக்குகந்தசீஷன்    
சீலமுடன் ஞானோபதேசம்பெற்று சிறப்புடனே மலைதனிலே இருந்தசித்து
கோலமுடன் யேமமென்ற வித்தைதன்னை குவலயத்தில் மாண்பர்களுக்காகவேண்டி
காலமுடன் அகஸ்தியராங் குருபாதத்தை தண்மையுடன் எதிர்த்ததொரு சீஷனாச்சே

விளக்கவுரை :


5905. சீஷனாமின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மன்னவாகேள்
தோஷமது வாராமல் யாக்கோபென்னும் துப்புரவாய் ஞானமென்ற சித்துதானும்
வேஷமது தான்மாற்றி நபிநாயகத்தை விருப்பமுடன் கண்டுவந்த யோகசித்து
பாஷமுடன் தான்பிறந்தநேர்மைக்கேளும் பாரினிலே பங்குனி மாதந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar