போகர் சப்தகாண்டம் 5906 - 5910 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5906 - 5910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5906. மாதமாம் பங்குனியாந் திங்களப்பா மகத்தான பூராடம் நாலாங்கால்தான்
தோதமுடன் பக்கிரியாக்கோபுதானும் தொல்லுலகைதான்மறந்து பிறந்தசித்து
சாதகங்கள் பொய்யாது விதியுந்தப்பா தாரணியில் நெடுங்காலமிருந்தசித்து
கோதமென்னும் புலஸ்தியனார் தானுமப்பா கொற்றவனார் ஈன்றெடுத்த புனிதனாமே

விளக்கவுரை :


5907. புனிதமாம் மகமதுமார்க்கந்தன்னில் புகழான கன்னியவள் பெற்றபாலன்
சனியுடனே ரேவதியுங் கூடச்சேர்ந்து சட்டமுடன் வந்துதித்த யாக்கோபப்பா
மனிதனெனும் ஜென்மமது பெற்றுமல்லோ மகத்மான மகமது மார்க்கஞ்சென்று
தனியான மக்கமென்ற தேசந்தன்னில் சட்டமுடன் போனதொரு சித்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

5908. சட்டமுடன் இன்னமனொரு மார்க்கங்கேளு சங்கரனே புத்தியுள்ள மணியேபாரு
திட்டமுடன் கொங்கணனார் பிறந்தநேர்மை தீர்க்கமுடன் யானுரைப்பேன் சுகந்தமாரா
வட்டமுடன் சித்திரையாந் திங்களப்பா வளமான உத்திராட முதல்கால்தன்னில்
அட்டதிசை தான்புகழப் பிறந்தபாலன் வன்பான கொங்கணவர் என்னலாமே

விளக்கவுரை :


5909. என்னவே யவர்பிறந்த நேர்மையப்பா எழிலான சங்கரகுலத்துதித்த
பன்னவே கானீனன் பெற்றபாலன் காசினியில் வந்துதித்த திருவுமாகும்
பொன்னரங்கம் பூண்டதொரு புனிதவானாம் புகழான தேவதா சித்துமாகும்
நன்னவனுக் கொப்பான கொங்கணவர்தானுங் காசினியில் வந்துதித்த திருவுமாச்சே

விளக்கவுரை :


5910. ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
மூச்சடங்கிப் போனதொரு மாயாசித்து முனையான தட்சணாமூர்த்தியாகும்
பாச்சலுடன் தட்சணப்பதியில்தானும் பாங்குடனே பள்ளிகொண்ட சித்துவாகும்
ஆச்சரியமானதொரு மாயாசித்து அவர்பிறந்த வண்மைதனைப் புகலுவேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar