போகர் சப்தகாண்டம் 5911 - 5915 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5911 - 5915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5911. புகலுவேன் ஆவணியாந் திங்கள்தானும் பூரணமாந் திருவோண முதற்காலப்பா
நிகலவே தட்சணாமூர்த்திநாயன் நீதியுடன் தான்பிறந்த நாளுமாச்சு
அகலவே கொல்லிமலைநாதன்பேரன் வன்பான வைஷ்ணகுல சம்பிரதாயன்
சகலமுமறிந்ததொரு ஞானசித்து தாரணியில் வந்துதித்த சித்துமாச்சே

விளக்கவுரை :


5912. சித்தான குலசம்பிரதாயபூபன் சிறப்பான தட்சணாமூர்த்திநாயன்
முத்தான யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் மூதுலகைக் கடந்ததொரு புனிதனாகும்
புத்தியுள்ள கோரக்கர் பிறந்தநேர்மை பண்பான கார்த்திகையாமென்னலாகும்
சித்திபெற அயலிடமாம் இரண்டாங்கால்தான் சிறப்பான நாளென்றே சொல்லலாமே

விளக்கவுரை :

[ads-post]

5913. சொல்லவே கோரக்கர் பிறந்தநேர்மை சந்திரனார் வசிஷ்டமகாரிஷியாருக்கு
புல்லவே கானகுற ஜாதியப்பா புகழான கன்னியவள் பெற்றபிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும் வேதாந்த கோரக்கர் சித்துதாமும்
நல்லதொரு பிரகாசமானசித்து நாதாந்த சித்தொளிவும் என்னலாமே

விளக்கவுரை :


5914. என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி மன்னாபாரு
துன்னவே கௌபால சித்துதாமும் சுடரொளியாம் பிரகாசமானசோதி    
மின்னவே வைகாசிமாதமப்பா மிக்கான சதயமது ரெண்டாங்கால்தான்
நன்னயமாய் அவர்பிறந்த நாளேயாகும் நலமான கௌபால சித்துபாரே

விளக்கவுரை :


5915. பாரேதான் தேவதா தச்சனப்பா பாங்கான ஜெகத்குரு கம்மாளன்தான்
நேரேதான் தவத்துதி சித்துவென்றும் நெடிதான கௌபாலரிஷிதானென்றும்
தீரேதான் வயிரக்கல் கண்டெடுத்து தீர்க்கமுடன் பொன்னுரைத்த சித்துவென்றும்
சீரேதான் பலநூல் காப்பியங்கள்கண்டு செப்பினேன் கௌபாலசித்துகாணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar