போகர் சப்தகாண்டம் 5916 - 5920 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5916 - 5920 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5916. காணவே யின்னமொரு புதுமைசொல்வேன் காசினியில் நாதாக்கள் கூறவில்லை
தோணவே ஜோதியென்ற முனிவர்தானும் துப்புரவாய் தானுதித்த வண்மைபராய்
பூணவே புரட்டாசி மாதமப்பா புகழான பூரட்டாதி யென்னலாகும்
மாணவே நாலாங்கால் தன்னிலப்பா மகத்தான ஜோதிமுனி வுதித்தவாறே

விளக்கவுரை :


5917. வாரான பிரம்மரிஷி மைந்தனப்பா மகத்தான சூரியகுந் தனிலுதித்த
தூரான பெண்மாது வரவர்ஜாதி துகளான ஜொதிமாமுனிவர்தானாகும்
வேரான மலைகுகைகள் குண்ணுதேடி விளக்கமற கல்லதனை யாராய்ந்தேதான்
கூறான வயிரக்கல் கண்டெடுத்த கொற்றவனார் ஜோதிமாமுனிதானாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5918. ஆச்சப்பா யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி வண்ணலேகேள்
மூச்சடங்கி சென்றதொரு மாடர்தானும் முனையுடனே தான்பிறந்த வண்மைகேளிர்
மாச்சலென்ற மார்கழியாந் திங்களப்பா மகத்தான உத்திரட்டாதிதானும்
வீச்சுடனே நாலாங்கால் என்னலாகும் விரைவான நாள்தனிலே பிறந்தார்தாமே

விளக்கவுரை :


5919. பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள வீராதிவீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே

விளக்கவுரை :


5920. சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar