போகர் சப்தகாண்டம் 5921 - 5925 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5921 - 5925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5921. தானான ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே

விளக்கவுரை :


5922. பாரேதான் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் பாலகனே சிறுபாலா பகரக்கேளும்
கூரேதான் சொன்னார்கள் இதிகாசங்கள் வப்பனே யார்தானுஞ் சொல்லவில்லை
நேரேதான் யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் நெடிதான வரரிஷியாமென்றசித்து
சீரேதான் அவர்பிறந்த வண்மையப்பா சிறப்புடைய சித்திரையாந் திங்கள்தானே

விளக்கவுரை :

[ads-post]

5923. சித்திரையாம் அசுவினி மூன்றாங்காலாம் சிறப்பான நாள்தனிலே பிறந்தாரென்றும்
பத்தியுடன் அவருடைய மார்க்கஞ் சொல்வேன் பண்பான திரணாக்கிய முனிவர்பேரன்
முத்திவழி செல்லுகின்ற சித்துவாகும் முனையான வரரிஷியாமென்றும்பேரு
சத்தியங்கள் தவறாத விசுவயோகி தாரணியில் வரரிஷியாமென்னலாமே

விளக்கவுரை :


5924. என்னவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான எந்தனது புத்திவானே
துன்னவே வால்மீகர் பிறந்தநேர்மை துப்புரவாய் அவருடைய வண்மைசொல்வேன்
மன்னவனுக்கொப்பான வால்மீகர்தானும் மகத்தான லோகமதில் பெரியசித்து
சொன்னதொரு புரட்டாசி திங்களப்பா சொற்பெரிய அனுஷமது நாலாங்காலே

விளக்கவுரை :


5925. காலான வால்மீகர் வேடனப்பா கன்னியாள் பெற்றதொரு குறத்திமைந்தன்
கோலான மராமரா உபதேசங்கள் கொற்றவனார் பெற்றதொரு சித்துமாச்சு
பாலான மாண்பருக்கு ஞானகாண்டம் பகுத்தறிய வால்மீகர் சரிதையப்பா
மாலான வவர்பெருமை யாருக்குண்டு மகத்தான ரிஷிகளுக்கில்லைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar