5926. இல்லையே இன்னமொரு
சரிதைசொல்வேன் எழிலான எந்தனது புத்திமாரா
தொல்லுலகிற் கீர்த்திபெற்ற
மாதுசித்து துப்புரவாய் ஊர்வசியாள் என்னுமாது
எல்லவருந் தான்புகழ
வைகாசிதன்னில் எழிலான பூரமென்ற நாலாங்காலாம்
வல்லமையாய் வந்துதித்த
தேவமாது வையகத்தில் ஊர்வசியாள் என்றமாதே
விளக்கவுரை :
5927. மாதான ஊர்வசியாள்
மார்க்கந்தானும் மகத்தான கானகத்து ரிஷிதானப்பா
தீதான பிரிங்கி
மகாரிஷியின்பேத்தி தீர்க்கமுடன் கானீனன் பெற்றமாது
ஆதான சாத்திரத்தில்
சித்துநூலில் அறிவுடைய ஊர்வசியாள் மாதுதானும்
கோதானந்தான் கொடுத்து
பிறந்தமாது குவலயத்தில் ஊர்வசியாஞ் சித்துகாணே
விளக்கவுரை :
[ads-post]
5928. காணவே இன்னமொரு
கவிதைசொல்வேன் கண்ணான கண்மணியே கழரக்கேண்மோ
பூணவே புலிப்பாணி மைந்தாபாரு
புகழான எந்தனிரு மணியே கேளும்
வேணவே இன்னம்வெகு வனேகசித்து
வேடமது பூண்டுமல்லோ இருந்தாரப்பா
மாணமருங் கல்வியுள்ள
சித்துகன்னில் மகத்தான சித்துகளைக் கூறலாச்சே
விளக்கவுரை :
5929. கூறவென்றால் கமலமுனி
பிறந்தநேர்மை கூறுவேன் வைகாசி திங்களப்பா
மாறலுடன் பூசமது
ரெண்டாங்காலாம் மகத்தான கமலமுனி பிறந்தநாள்தான்
சீறலது வாராத தேவசித்து
தெளிவுடைய வையகத்துக் குகந்தசித்து
ஆறவே யொருவரால் கூறப்போமோ
வப்பனே ஞானவொளிசித்துபாரே
விளக்கவுரை :
5930. பாரேதான் சித்தொளியின்
மகிமைபாரு பாங்கான காலாங்கி பாட்டன்வர்க்கம்
நேரேதான் வம்மிஷத்திற்
பிறந்தசித்து நெடிதான சின்மயானந்தசித்து
வேரேதான் இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் வெளியரங்கமானதொரு மாராகேண்மோ
சீரேதான் அறிவான
அனந்தசித்தர் தீர்க்கமுடன் பிறந்ததொரு நேர்மைகாணே
விளக்கவுரை :