5931. காணவே மாசியென்ற திங்களப்பா
கருவான ரேவதியாம் மூன்றாம்பாதம்
பூணவே யவர்பிறந்த நாளதாகும்
புகழான மார்க்கமது யாதென்றாக்கால்
வேணதொரு டமரகனார் மைந்தரப்பா
வேதாந்த அறிவான அனந்தராகும்
தோணவே பிரதிலோமனென்றே
சொல்வார் தொல்லுலகில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
விளக்கவுரை :
5932. உண்டான இன்னமொரு
மர்மஞ்சொல்வேன் வுத்தமனே நாதாந்தமணியே கேண்மோ
தொண்டனெனும் சித்துமுனி
ரிஷிகளுக்கு தோற்றமுள்ள வகப்பேயர் சித்துவாகும்
கண்டவர்கள் விடுவார்கள்
சித்துதம்மை காசினியில் உபதேசம் பெற்றசித்து
அண்டமெனும் வையகத்தில்
பிறந்தநேர்மை வப்பனே யானுரைப்பேன் சொல்வேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5933. ஆச்சப்பா கன்னியவள் பெற்றபிள்ளை யவதார புருஷனென்றே செப்பலாகும்
மூச்சடங்கி வெகுகால
மிருந்தசித்து முனையான வகப்பேயர் சித்துவாகும்
மாச்சலுடன் இன்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான குதம்பையென்ற சித்துதாமும்
ஏச்சலதுவாராமல் தான்பிறந்த எழிலான
சித்தினிட மார்க்கங்கேளே
விளக்கவுரை :
5934. கேளேதான் ஆடியாந் திங்களப்பா
கெவனமுடன் விசாகமென்ற மூன்றாங்காலில்
நானப்பா தான்பிறந்த
குதம்பைசித்து நலமுடனே திரிகால பூசைசெய்து
வேளப்பா யாகமது
முடித்துமல்லோ வேள்வியுடன் பாலாமிர்தம் உண்டசித்து
ஆளப்பா பெரியோர்கள்
நேசம்பெற்று வப்பனே மரப்பொந்தில் இருந்தசித்தே
விளக்கவுரை :
5935. சித்தான மாதவமாங்
குலத்துதித்த சிறப்பான குதம்பையென்ற சித்துவப்பா
முத்தான பாலமுர்தம்
உண்டுமல்லோ மூதுலகைத் தான்பழித்த சித்துவாகும்
பத்தியுடன் வையகத்தில்
நெடுங்காலந்தான் பான்மையுடன் வீற்றிருந்த பரமசித்து
சுத்தியுள்ள திருவாத்தி
மரத்தின்கீழே சுந்தம்போலிருந்ததொரு மாயாசித்தே
விளக்கவுரை :