போகர் சப்தகாண்டம் 5936 - 5940 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5936 - 5940 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5936. மாயான சித்தல்லோ மகிமைபாரு மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு
தாயான பாம்பாட்டி சித்தரப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து 
காயான முப்பழமும் பாலுங்கொண்டு கலியுகத்தில் நெடுநாளாய் இருந்தசித்து
சேயான பாம்பாட்டி சித்துதாமும் சீருலகில் பிறந்ததொரு சித்துதானே    

விளக்கவுரை :


5937. தானான பாம்பாட்டி பிறந்தமாதம் தாக்கான கார்த்திகையாந் திங்களப்பா
கோனான மிருகசீரிடந்தானாகும் கொற்றவனே மூன்றாங்கால் என்னலாகும்
தேனான அவர்பிறந்த நாள்தானப்பா தேசத்தில் சித்தர்முனி கண்டதுண்டோ
மானான பதினெண்பேர் நூலைப்பார்த்து மார்க்கமுடன் தானறிந்து சொல்லிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

5938. சொல்லவென்றால் பாம்பாட்டி மர்மந்தானும் தோற்றமுடன் ஜோகியென்ற வம்மிஷந்தான்
புல்லவே மசானகுறி யோகியப்பா புகழ்பெரிய குருடனார் பெற்றபிள்ளை
வெல்லவே மாலைசுற்றித் தான்பிறந்த வேதாந்தப் பாம்பாட்டி யென்னலாகும்
நல்லதொரு சித்துமுனி உபதேசங்கள் நலம்பெற்ற பாம்பாட்டியாமே     

விளக்கவுரை :


5939. பாம்பான இன்னமொரு மார்க்கங்கேளு பண்பான புலிப்பாணி நேசபாசா
தீம்பில்லா காலகண்ட ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் பிறந்ததொரு திண்ணம்பாரு
தாம்புகழுஞ் சித்திரையாந் திங்களப்பா தாக்கா உத்திராடம் இரண்டாம்பாதம்
மாம்புலமாம் வட்டாரந் தன்னிலப்பா மகத்தான சிவவேடம் பூண்டசித்தே     

விளக்கவுரை :


5940. பூண்டதொரு காலகண்ட ரிஷியார்தாமும் புகழான பேரண்ட முனிதான்சித்து
ஆண்டகையார் சித்துமுனி மைந்தனுக்கு வன்பான பேரனது பேரனப்பா
தாண்டகையாங் காலகண்ட சித்துவாகும் தரணிபதி சிவயோக சித்துவாகும்
வேண்டியதோர் கருமான மறிந்தசித்து வேதாந்த காலகண்டர் என்னலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar