போகர் சப்தகாண்டம் 5941 - 5945 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5941 - 5945 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5941. என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்
பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா
சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் முதற்பூசங் கால்தானொன்றே

விளக்கவுரை :


5942. ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் வடிவேலர் பிறந்தாரென்று
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் குவலயத்தில் சொல்லொண்ணாது
தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்
பன்றிபெருச்சாளியின் மேல்சாரியேகும் பண்பான விநாயகருக்கு தம்பியாமே    

விளக்கவுரை :

[ads-post]

5943. தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி வடிவேலர் சித்துதன்னை
வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி வடிவேலரென்றே சொல்வார்
கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான கோடிபொருள் ஈவாரப்பா
தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான வடிவேலர் தண்மைபாரே

விளக்கவுரை :


5944. பாரேதான் இன்னமொரு பதமுஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேபாரு
சீரான யூகிமுனி பிறந்தவண்ணம் சிறப்புடனே சொல்லுகிறேன் திறமைமெத்த
நேரான வாவணியாந் திங்களப்பா நெடிதான பூசமது மூன்றாங்காலாம்    
கூரான நாளதனில் பிறந்தசித்து குறிப்பான யூகியென்ற முனிவர்தானே    

விளக்கவுரை :


5945. தானான யூகிமுனி மார்க்கமென்றால் தகமையுள்ள தன்வந்திரிக் குற்றபேரன்
கோனான சிங்களவ குலத்துதித்த கொம்பனையாள் கானீனன் பெற்றபிள்ளை
தேனான திரவிடத்திற் சொன்னார்போல தீர்க்கமுடன் வடமொழியில் சொல்லலாச்சு
மானான மாண்பருக் குபயோகத்தால் மாட்சியுடன் சொன்னதொரு நீதியாமே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar