போகர் சப்தகாண்டம் 5946 - 5950 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5946 - 5950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5946. நீதியா மின்னமொரு மர்மஞ்சொல்வேன் நிஷ்களங்கமான புலிப்பாணியப்பா
தீதிலா ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்புடனே பிறந்ததொரு நேர்மைசொல்வேன்
கோதிலா வற்பசி மாதமப்பா குறிப்பான புனர்பூசம் மூன்றாங்கால்தான்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாரினிலே யவதரித்த சித்துமாமே

விளக்கவுரை :


5947. சித்தான ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்பான பரத்துவமாம் ரிஷியின்பேரன்
முத்தான வனுலோமன் பெற்றபிள்ளை மூதுலகில் கீர்த்தியுடன் இருந்தசித்து
சத்தான யூகியென்ற சாத்திரந்தான் சாங்கமுடன் பன்னீராயிரந்தானாகும்
சுத்தமுள்ள ரிஷிதேவர் சொன்னதில்லை சுந்தரனார் இதிகாசங் கூறினாரே

விளக்கவுரை :

[ads-post]

5948. கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறஉபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே

விளக்கவுரை :


5949. நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே

விளக்கவுரை :


5950. புகலுவேன் கண்டீசர் பிறந்தநேர்மை புகழான வைகாசி மாதமாகும்
நிகலுவேன் பூரமென்ற மூன்றாங்கால்தான் நீதியுடன் பிறந்தநாளேயாகும்
சகலமுமறிந்ததொரு சித்துதாமும் சதாகாலம் வையகத்திலிருந்தசித்து
அகலவே புலஸ்தியருக்குற்றபேரன் அன்பான வேடருட ஜாதிதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar