5951. சாதியாங் கானீனன்
பெற்றபிள்ளை சாங்கமுடன் நெடுங்கால மிருந்தசித்து
சோதிமணி சுந்தரம்போல்
குகைதானுல்லே சுட்டெரிக்கும் நிலாப்போலே இருக்குஞ்சித்து
நீதிமனுமுறை
தவறாயிருந்தசித்து கடலாழியுலகுபதி யாண்டசித்து
தீதிலா சங்கமென்ற புலவருக்கு
தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தசித்தே
விளக்கவுரை :
5952. செய்யவே யின்னமொரு
மார்க்கம்பாரு செம்பவலகனிவாயா துய்யபாலா
உய்யவே திருமூலரென்ற
சித்துவுலகமதில் தான்பிறந்தசேதிவண்ணம்
பையவே புரட்டாசி திங்களப்பா
பாலகனார் வந்துதித்த மாதமாகும்
வெய்யவே அவிட்டமென்ற
மூன்றாங்கால்தான் மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5953. ஆச்சப்பா
திருமூலவர்க்கத்தோர்கள் அவனியிலே சொல்லுதற்கு நாவுமில்லை
மூச்சடங்கிப்போனதொரு
பாண்டியர்கள் தாமும் முனையான சங்கமதில் வாதுசெய்தோன்
பாச்சலுடன் சேரனுக்கு
பெற்றபாலன் பாரினிலே யனுலோமன் யென்னலாகும்
வீச்சலுடன்
இதிகாசபுராணமெல்லாம் விருப்பமுடன் பாடிவைத்த சித்துகாணே
விளக்கவுரை :
5954. காணவே யின்னமொரு
கருமானங்கேள் கருவான புலிப்பாணி மைந்தாபாரு
தோணவே எழுகடலுஞ்
சுற்றிவந்தேன் தோறாமல் தட்சணமாண்பர்தம்மை
பூணவே நெடுங்கால
மிருந்துமல்லோ பொங்கமுடன் அதிசயங்கள் மிகவுங்கண்டேன்
வேணதொரு தேவாதி தேவரல்லோ
விருப்பமுடன் அனேகவித கோயிலுண்டே
விளக்கவுரை :
5955. உண்டான வையகத்து
மாண்பர்தம்மில் வுத்தமனே சன்னதங்கள் மெத்தவுண்டு
கண்டாலும் மாண்பர்களைப்
பார்த்தபோது கருவான தெய்வங்கள் உச்சாடத்தால்
செண்டான முறைமைகொண்டு வுறவுபேசி
செம்மலுடன் அருகிருந்து சிலதுமாண்பர்
திண்மையுடன் குறிசொல்ல
வந்தோனுக்கு தீர்க்கமுடன் தானுரைப்பார் வதீதந்தானே
விளக்கவுரை :