போகர் சப்தகாண்டம் 5956 - 5960 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5956 - 5960 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5956. அதிதமாஞ் சமுசாரி செய்யும்வித்தை வன்போடு வாயிரம்பேர் குறிகேட்டாலும்
கதிதமுடன் தேவதைகள் வசியத்தாலே கதிரான சுகசேதி சொல்வோன்போல
மதிபோன்ற தேவதா கிருபையாலும் மகத்தான உண்மைவழி கூறினார்போல்
சதியுடனே சன்னதங்கள் மிகவுமாகி சட்டமுடன் கூறலுற்றார் மாண்பர்க்காமே

விளக்கவுரை :


5957. மாண்பான குறிசொல்லும் மார்க்கங்கேளும் மகத்தான பத்துபேர் ரெண்டுபேர்கள்
ஆண்பிள்ளைத் தன்னோடும் பாலரோடும் வழகான மாதர்களின் கூட்டத்தோடும்
வீண்பேச்சி வார்த்தைகளும் மிகவாய்ப்பேசி விருப்பமுடன் யாதொன்றும் தெரியாப்போலும்
நாண்போடு தூதுரைக்கும் மாண்பர்தாமும் நலமான மாந்தருடன் பேசுவாரே

விளக்கவுரை :

[ads-post]

5958. பேசியே மாண்பரோடு வுறவுபேசி பேரான குறிகேட்க வந்தோர்தம்மை
காசினியில் வந்ததொரு மாண்பர்நாங்கள் கருவாகக் குறி சொல்லும் மாண்டிதன்னை
பாசிபடா குறியுரைப்பா ரென்றுசொல்லி பட்சமுடன் வெகுதூரங் கேட்டுவந்தோம்
மாசியென்னும் பதிதனிலே குறிகள்கேட்டோம் மகத்தான குறியதுவுஞ் சொல்லலாச்சே

விளக்கவுரை :


5959. சொல்லவென்றால் குறியதுவும் என்னசொல்வோம் சோடசத்தில் ஒன்றேனும் பொய்யேயில்லை
வெள்ளவே குறிகேட்டார் மெய்யைப்போல மேன்மையுடன் கூடிவருமாண்பரொடு  
புல்லவே வுறவுகொண்டு நயங்கள்பேசி புகழான எதிரியின் வார்த்தைதன்னை   
மெல்லவே யவருரைக்கும் வார்த்தைதன்னை மேன்மையுடன் உபாயத்தால் அறிவார்தானே

விளக்கவுரை :


5960. தானாக எதிர்மாண்பர் கூறும்வார்த்தை தண்மையுடன் உபாயமதாய்த் தானறிந்து
கோனான குறியுரைக்கும் சங்கன்தானும் கொப்பெனவே யடையாள ரூபத்தோடும்
மானாக எதிரியின்தன் வார்த்தையெல்லாம் மார்க்கமுடன் தானுரைத்து ஆளைக்காட்டி
பானாக பதிமேடை மறைந்துகொண்டு பாங்குடனே குறிசொல்வோர் பின்நிற்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar