5961. நின்றுமே தூதுரைத்து
ஆள்காணாமல் நேர்மையுடன் ஓர்பக்கம் மறைவாய்நின்று
சென்றதொரு மாண்பருக்கு
குறியுஞ்சொல்ல செம்மலுடன் ஜங்கமெனும் வேடம்பூண்டு
நன்னயமாய் கிருஷ்ணமுடி
தானும்பூண்டு நலமான வுடுக்கைதனை கையிலேந்தி
பன்னவே பலபேர்கள்
கூட்டத்தோடும் பாரினிலே பலகுறிகள் சொல்வான்பாரே
விளக்கவுரை :
5962. சொல்வானே யவரவர்கள்
வார்த்தைகொண்டும் துப்புரவாய் முன்சொன்ன தூதைக் கொண்டும்
புல்லவே குறிமேடை
தனிலிருந்து புகழான யாவேசம் வந்தாற்போல
மெல்லவே வாய்திறந்து
பொன்னாங்காயை மேன்மையுடன் மென்றுதின்று உமிநீர்தன்னை
நல்லதொரு மதுவுண்ட
நாற்றம்போல நயமுடனே வமனமது செய்வான்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5963. செய்யவே மதுபானங்
கொண்டுமல்லோ செயலான தன்னினைவு தனக்குமாறி
பையவே மயன்மீதில் வாடைகொண்டு
பதறுதே தேகமது நிலைகொள்ளாது
உய்யவே யார்வந்து
எதுகேட்டாலும் உத்தமனே சித்தடியேன் சொல்வேன்பாரு
துய்யபுகழ் பாண்டியன்போல்
வுதாரம்பேசி துப்புரவாய் குறிசொல்வோன் கேட்பான்பாரே
விளக்கவுரை :
5964. பாரேதான் முன்சொன்ன
வடையாளம்போல் பாங்குடனே மாண்பர்களை யுருட்டிப்பார்த்து
நேரேதான் ஈசானீய மூலையப்பா
நெருக்கமுடன் நடுபந்திதனிலிருக்க
சீரேதான் கட்டழகி மாதுதன்னை
சிறப்பாக சித்தடியைக் கூப்பிடென்று
ஆரோதான் அம்மம்மா
குறைகளொன்று ஆர்க்கமுடி போதாது என்பான்பாரே
விளக்கவுரை :
5965. என்னவே யுந்தனுக்குக் குறைகள்மெத்த ஏர்க்கமுடி போகாது ரோகம்மீறி
பன்னவே யுன்புருஷன்
உன்னைவிட்டு பாரினிலே வனசாரி சென்றாரம்மா
துன்னவே மைந்தனுக்குக்
கண்ணும்போச்சு துப்புரவாய்ப் பாவாடைராயனுக்கு
மின்னவே கங்கணமுங்
கட்டியல்லோ மிக்கான பொங்கல்களு மிட்டீர்காணே
விளக்கவுரை :