5966. காணவே ரிருபத்தோர் வாரம்மா
கட்டழகி காணிக்கைகொண்டுசென்று
தோணவே முதற்பூசை
யுன்னுதென்று துப்புறவாய் சொல்லினதும் வுண்டோகூறும்
நாணவே குறுமுகத்தில்
வந்துயென்னை நன்மையோ துன்மையோ வென்றுசொல்லி
பாணம்போல் மனதுருகி
மனதுவந்து பாலகனே கேட்கவந்தீர் உண்மைதானே
விளக்கவுரை :
5967. உண்மையாம் என்குறிகள்
பொய்யாதம்மா வுத்தமியே நாதாக்கள் வணங்குவார்கள்
வண்மையாங் கைகண்ட
குறிதானென்று வளப்பமுடன் நிதியெனக்கு குடுப்பார்பாரு
திண்மையாம்
பாதகாணிக்கையோடும் தீர்க்கமுடன் புஷ்பதாம்பூலத்தோடும்
தண்மையுடன்
வேணவுபசாரத்தோடும் தட்டாமல் எந்தனுக்குத் தருவார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5968. தட்டாமல் தருவதானென்றுசொல்லி
சர்க்கமிட்டு சித்தடிக்கு வாதுகூறி
கொட்டாவி கொண்டல்லோ
மலையேறியப்பா கொப்பெனவே யான்போறோமென்றுசொல்லி
சட்டமுடன் கற்பூர
பழத்தைவாங்க சாங்கமுடன் வாய்தனிலே கொண்டுமல்லோ
வட்டபுரி யம்மனது
பாதம்போறேன் வளமுடனே எல்லாரும் பணிவீர்தாமே
விளக்கவுரை :
5969. பணியவென்று குறிசொல்வோன்
கூறும்போது பண்பான முழுமூடர் கழுதைமாண்பர்
அணியணியாய் குறிகேட்டு
மெய்யென்றெண்ணி அவன்பாதந்தனில்விழுஞ் சண்டிமாண்பர்
மணியான தெய்வமது ஒன்றிருக்க
மார்க்கமுடன் மதுகொள்ளும் மாண்பர்தம்மை
கணிதமுடன் குறிகண்டு
குணமுங்கண்டு காசினியில் வந்துதித்த தெய்வந்தானே
விளக்கவுரை :
5970. தானான மதுகொள்ளும்
மதுரைவீரன் தாரணியில் குறிசொல்லும் தெய்வமென்றும்
கோனான முழுமடையர் பேயரப்பா
குவலயத்தில் கல்விகற்றும் பேயனாகி
மானான பஞ்சறிவுந்தானறிந்து
மகத்தான சாத்திரங்கள் படித்துக்கேட்டு
பானாகக் குறிசொல்வோர்
வலையிற்சிக்கி பண்புடனே மயங்குகிறார் மடையர்தாமே
விளக்கவுரை :