5971. மடையான மாண்பர்களும்
பலநூல்கற்று மகத்தான மாயாவின் வலையிற்சிக்கி
இடைநடுவில் வையகத்து
வாழ்க்கைதன்னை யெழிலாகத் தன்மனதில் பாராமற்றான்
கடைபோன்ற ஞானவழி கோடிசித்தர்
கருவான சாத்திரங்கள் செய்திருக்க
திடமுறவே சற்றேனும்
மனதுறாமல் தீர்க்கமுடன் பலநூலும் பார்த்தார்தானே
விளக்கவுரை :
5972. தானான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தாமிருக்குங் காலந்தன்னில்
பானான வையகத்து
மாண்பரெல்லாம் பதிகெட்டு மதிகெட்டு குறிகள்கேட்டு
தேனான மனோன்மணியை
மறந்துமல்லோ தீர்க்கமுடன் மூடவழி சென்றார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5973. பாரேதான்குறியுரைக்குஞ் ஜங்கன்தானும் பாங்கான பதிமேடைதனிலிருந்து
நேரேதான் மாண்பர்களின்
கூட்டந்தன்னை நேர்மையுடன் தானோக்கி பார்த்துமேதான்
சீரேதான் சத்தகன்னி
வந்தேனப்பா சிறப்புடனே சன்னதங்கள் மிகவுண்டாச்சி
கூரேதான் வாடைகொண்டு
வீசுதையா கொற்றவரே குறிகேட்டால் கூறுவேனே
விளக்கவுரை :
5974. கூறுவேன் விளையாடி
சன்னதங்கள் கொப்பெனவே ஓங்கார சத்தத்தோடு
மாறுபடா திருமேனி மங்கையப்பா
மகத்தான பச்சைரிஷி வனத்திற்றானும்
ஆறுண்டு குளமுண்டு மடுவுமுண்டு
அங்கிருக்கும் வனத்துகன்னி யானுமல்லோ
வீறுடனே வெகுநாளாய்
யுந்தன்வாசல் விருப்பமுடன் விளையாட வந்தேன்பாரே
விளக்கவுரை :
5975. வந்தேனென்று சொல்லுகையில்
ஜங்கன்தானும் வகையறிய முழுமூடர் மாண்பர்தம்மில்
சிந்தனையா யதிலொருவர்
தானெழுந்து சிறப்புடனே குறிகேட்க வந்துநின்று
பந்துமுலைஸ்தனத்தாலே
பச்சைகன்னி பட்சமுடன் எந்தனுக்கு குறிகள்கூறும்
தந்தையார் வைத்ததோர்
நிதிகள்கோடி தாரணியில் மெத்தவுண்டு சொல்லொண்ணாதே
விளக்கவுரை :