5976. உண்டான திரவியங்கள்
மெத்தவுண்டு ஓகோகோ நாதாக்கள் கொடுத்த பாக்கியம்
தண்மையுடன் தேவதா
ஸ்தலங்கள்யாவும் தகமையுடன் தருமமது செய்தேன்யானும்
வண்மையுடன் யாகமது
செய்துமல்லோ மகத்தான காணிக்கை யாவுந்தந்தேன்
உண்மையாய்க் கொடுத்தநீதி
கோடியுண்டு வுத்தமனே மைந்தனிலை என்றார்தாமே
விளக்கவுரை :
5977. என்றுமே மாண்மர்களில்
ஒருவனப்பா எழிலான ஜங்கமனைக் கண்டுமல்லோ
குன்றான மலைநாடு
குகைகள்தன்னில் கொம்பனையே வந்ததொரு கன்னிதாயே
சென்றுமே தம்பதிக்கு
வந்தேனம்மா செம்மலுடன் எந்தனுக்கு மைந்தன்வேண்டும்
இன்றுமே குறியுரைத்து
எந்தனுக்கு எழிலுடனே ஏகவென்று தொழுதிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
5978. தொழுதாரே சமுசாரியானமாண்பர்
துப்புறவாய் பாதகாணிக்கையிலிட்டு
அழிதாரே தேவியுடன் தானுமல்லோ
அங்ஙனவே இருபேரும் சாஷ்டாங்கிட்டு
முழுவதிலும் எங்களைநீர்
பாதுகாத்து மொய்குழலே எந்தனுக்கு மைந்தனீந்து
மழுவுடனே கற்பூரதீபாராத்தி
மகிழ்ச்சியுடன் தருவேனென்று பணிந்திட்டாரே
விளக்கவுரை :
5979. பணியவே சத்தகன்னி
ஜங்கன்தானும் பட்சமுடன் மனதுவந்து மனங்களித்து
மணியான மைந்தனல்லோ
வுனக்குண்டாகும் மகப்பேறு மெத்தவுண்டு யுந்தனுக்கு
கணிதமுடன் குறியஉரைத்தேன்
மைந்தாபாலா கட்டழகி யுன்தேவி இன்றுமட்டும்
துணிவுடனே இருபத்தோர்
வாரமப்பா துப்புரவாய் பூசைமுகம் வரச்சொல்வீரே
விளக்கவுரை :
5980. சொல்லவே சத்தகன்னி
ஜங்கன்தானும் சுத்தமுடன் சமுசாரி மாண்பன்கேட்டு
வெல்லவே தன்தேவி தனையழைத்து
விருப்பமுடன் இன்றுமுதல் நீயுமேதான்
புல்லவே சத்தகன்னி
ஜங்கன்தானும் புகழாக வாக்குரைத்த தன்மைபோலே
நல்லதோர் இருபத்தோர்
வாரமட்டும் நலமுடனே பதிமுகத்தில் செல்வீர்தாமே
விளக்கவுரை :