5981. தாமான சமுசாரி மாண்பன்தேவி சட்டமுடன் நாயகன்சொற் கடவாமற்றான்
பேமானி தானுரைத்த வார்த்தை
தன்னை பேருலகில் உபதேசம் மெய்யென்றெண்ணி
சாமான்ய மானதொரு
பெண்பால்தானும் சட்டமுடன் ஜங்கமன்தன் வாசற்சென்று
பூமான்கள் அறியாமல்
பதிமுகத்தில் புகட்சியுடன் ஜங்கமனைக் கண்டாள்பாரே
விளக்கவுரை :
5982. கண்டதொரு சத்தகன்னி
ஜங்கன்தானும் கருத்துடனே கொம்பனையைக் கொண்டுசென்று
அண்டர்முனி தேவாதி
தேவர்க்கெல்லாம் அவனியிலே குறியுரைத்தேன் மெத்தவுண்டு
தண்டுளப மாலையணி
கிருஷ்ணன்போலே தகமையுடன் மாதுதனைக் கைபிடித்து
கொண்டனைத்து சைதன்யஞ்
செய்துமல்லோ கொப்பெனவே மைந்தனுமுண்டாக்கினானே
விளக்கவுரை :
[ads-post]
5983. ஆக்கினான் இருபத்தோர்
வாரமட்டும் அங்ஙனவே பதிமுகத்தில் சென்றுமல்லோ
பாக்கியங்கள் பெற்றவர்போல்
வாரவாரம் பதிமுகத்தில் ஜங்கமன்தான் கூடிருந்து
சாத்திரங்கள் சொற்பனங்கள்
கண்டாற்போல சட்டமுடன் தம்பதிக்கு வந்துமல்லோ
நீக்கியே சத்தகன்னி
வரமும்பெற்று நீட்சியுடன் வடபதிக்கு வந்திட்டாரே
விளக்கவுரை :
5984. வந்தாரே வெகுநாட்கள்
தான்கழித்து வளமையுடன் மைந்தனையும் பெற்றபின்பு
சிந்தனைகள் தாம்நீங்கி
கலியும்நீங்கி சிற்பரனைப்போல ஒருபாலன்பெற்று
பந்தமுடன் மணவாளன்
மனைவிதானும் பட்சமுடன் மைந்தனையுங் கொஞ்சியல்லோ
அந்தவுலகத்தினிலே சத்தகன்னி
எழிலான குறிப்போலே யுண்டென்பாரே
விளக்கவுரை :
5985. என்பாரே முழுமடையர்தானுமப்பா
எழிலான சாத்திரங்கள் கற்றுமென்ன
வன்பான மாண்பனல்லோ
நம்மைப்போல வளமையுடன் வையகத்தில் வந்தமாண்பன்
தன்போலே மனிதனென்று
வறியாமற்றான் தண்மையுடன் சத்தகன்னி ஜங்கன்தன்னை
நன்னயமாய் மனிதனையுஞ்
சுவாமியென்று நலமுடனே யவர்காலில் விழுந்திட்டாரே
விளக்கவுரை :