போகர் சப்தகாண்டம் 5986 - 5990 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5986 - 5990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5986. விழுந்தாரே யவன்கலைவி தன்னிற்சென்று விட்டகுறை இருந்ததொரு பாவத்தாலே
அழுந்தியே அவன்வலையிற் சிக்கியல்லோ அவனியிலே பேருண்டாய் பேரும்பெற்று
தொழுதுமே குலதெய்வம் அவன்தானென்று தொல்லுலகில் கெட்டதொரு கழுதைமாண்பர்
மழுவேந்தர் கதைபேசி நயங்கள்பேசி மாநிலத்தில் கேட்டவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


5987. கோடியாமின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குறிப்பான தட்சணமாமாண்பருக்கு
நீடியே பலதேவகோடியாக நீதியுடன் தாமுரைப்பார் அனந்தமார்க்கம்  
வாடியே வையகத்து மாண்பரெல்லாம் வளமையுடன் பலகாலுந் தொழுதிரஞ்சி
தேடியே திரவியங்கள் அனைத்துந்தந்து தீர்க்கமுடன் தான்கொடுத்து நிதிகேட்பாரே

விளக்கவுரை :

[ads-post]

5988. நிதியான மானிடர்மேல் குறிகள்வந்து நினைத்துவிளையாடுமது சன்னதங்கள்
பதியான பதிவிட்டு வந்தேனென்றும் பாலகனே தெய்வகன்னி நான்தானென்றும்
துதியுடனே மரத்துமுனி யென்பேரென்றும் துப்புரவாய் எல்லையது பிடாரியென்றும்
மதியான லாடமுனி நான்தானென்றும் மகத்தான சன்னதங்கள் கூறுந்தானே

விளக்கவுரை :


5989. தானான வம்மனது காளியென்றும் தாக்கான வேல்முருகன் யான்தானென்றும்
கோனான வாடைமுனி யான்தானென்றும் குறிப்பான காட்டேரி யான்தானென்றும்
தேனான திருவேங்கிட பதிதானென்றும் சிறப்பான அங்காள வல்லியென்றும்
மானான கார்த்தவராயனென்றும் மகத்தான அனேகவித தெய்வம்பாரே

விளக்கவுரை :


5990. பாரேதான் தெய்வமது அனேகங்கோடி பாரினிலே மாண்பர்மேல் சன்னதங்கள்   
நேரேதான் தெய்வமயல் கொண்டோர்போலும் நேர்மையுடன் பலபலவாஞ் சன்னதங்கள்
கூரேதான் குடிகள்படை சேனைதன்னில் கோஷ்டமிட்டு சன்னதங்கள் மிகக்கொண்டாடும்
வீரேதான் பிராணாய வுட்சாடந்தான் வீரமுடன் தானுரைப்பார் வெகுவாய்த்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar