போகர் சப்தகாண்டம் 5991 - 5995 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5991 - 5995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5991. தேனேகேள் லாடகவி யனேகஞ்சொல்வார் தாக்கான பரிபாஷை மிகவுஞ்சொல்வார்
மானேகேள் சன்னதங்கள் மிகவுண்டாகி மார்க்கமுடன் திரேகமது நடுக்கல்கண்டு
தேனேகேள் சிதாபாச நிலையில்நின்று தீர்க்கமுடன் வதிதங்கள் மிகவுரைப்பார்
தானேதான் தெய்வமது கொண்டாற்போலே தகமையுடன் பலபிரட்டு பேசுவாரே

விளக்கவுரை :


5992. பேசுகின்ற வார்த்தைதனை மெய்யென்றெண்ணி பேரான தட்சணத்து மாண்பரெல்லாம்
காசிபணம் நிதியனைத்தும் மிகவுந்தந்து கருத்துடனே குறிமுறைகள் கேட்டாரப்பா
ஆசுகவி சாத்திரங்கள் பார்த்துமென்ன அறிவுகெட்ட மாண்பருக்கு மதியீனந்தான்
தேசுலவு பூந்துடையாய் போகசீஷர் தெளிவுடனே மிகவுரைப்பேன் கேளுகேளே    

விளக்கவுரை :

[ads-post]

5993. கேளேதான் தட்சினத்து மாண்பரெல்லாம் கெவனமுடன் குறிகேட்டு மதியுங்கெட்டு
பாளேதான் சாத்திரத்தை மிகப்பாராமல் பாருலகில் மதிகெட்டு குருடராகி
ஆனேதான் அறிவழிந்து மானங்கெட்டு வப்பனே வஞ்ஞான வலையிற்சிக்கி
நாமேதான் போகாமல் நமனுக்காளாய் நாட்டினிலே யிருந்தவர்கள் கோடிகாணே

விளக்கவுரை :


5994. காணவே எந்தனது சீஷபாலா கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே தேசாதி தேசமெல்லாம் துப்புறவாய் குளிகைகொண்டு வடியேன்தானும்
நீணவே காலாங்கி கடாட்சத்தாலே நீதியுடன் சத்தசாகரமுந்தாண்டி
பாணமுடன் எழுகடலுஞ் சுற்றிவந்து பாங்கான நிலைதனிலே நின்றிட்டேனே

விளக்கவுரை :


5995. இட்டேனே அட்டதிசை யானுங்கண்டேன் எழிலான தட்சணத்துமாண்பர்போலே
கெட்டதொரு மாண்பர்களைக் கண்டதில்லை கெடியான தட்சணமாம்பதியிலப்பா
திட்டமுடன் வெகுகோடி மாண்பர்தம்மை தீர்க்கமுடன் கண்டேனே தட்சணத்தில்
சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தானுரைத்த வண்ணமது போல்கண்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar