5996. கண்டேனே யடியேனும் யானுமல்லோ
கனமான போகரேழாயிரத்தை
அண்டர்முனி தேவாதி
தேவரெல்லாம் வன்புடனே மனதுவந்து களிப்பதற்கும்
தண்டபம்போல் வையகத்து
சித்துமாண்பர் தருவான குருக்கள் மனுவேந்தருக்கும்
சண்டமாருதம்போலே இந்தநூலை
சாற்றினேன் பெரியோர்கள் சமுசாரிக்கே
விளக்கவுரை :
5997. சாரிகேள் சமுசாரியானபேர்க்கு சட்டமுடன் சித்துமுனியானபேர்க்கு
வாரிதிபோல் பெருநூல்
ஏழாயிரந்தான் மகத்தான நூல்களெல்லாம் இதிலடக்கம்
மீறியதோர்
இந்நூலுக்குற்றநூலாம் மேன்மையுடன் அகஸ்தியனார் காவியந்தான்
வீறியதோர் பன்னீராயிரக்
காண்டந்தான் வித்தகனார் பாடிவைத்த நூல்தான்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5998. பாரேதான் சத்தகாண்டந்
தன்னிற்குள்ளே பாங்கான லோகவதிசயங்களெல்லாம்
நேரேதான் ஆறாவதானகாண்டம்
நெடிதான காண்டமிது குருநூலாகும்
தீரேதான் கடைகாண்டம்
ஏழாங்காண்டம் தீர்க்கமுடன் இன்னவதிசயங்கள்கூறும்
சீரேதான் காலாங்கி
கடாட்சத்தாலே சிறப்புடனே பாடிவைத்தேன் பெருநூல்தானே
விளக்கவுரை :
5999. நூலான நூலிதுதான்
சத்தகாண்டம் நுணுக்கமுடன் இதிலடக்கஞ் சொல்லொண்ணாது
பாலான பதினெண்பேர்
சொன்னநூலும் பயிலான இந்நூலுக் கொள்ளாதப்பா
சேலான நவகோடி ரிகள்தாமும்
செம்மலுடன் கோடிவரை நூலுஞ்செய்தார்
மாலான நூலிதுவும் மகிமைமெத்த
மகத்தான விந்நூல்போல் இல்லைதானே
விளக்கவுரை :
6000. தானான யெனதையர்
காலாங்கிநாதர் தண்மையுடன் அவர்பாத கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
கிருபையாலும் தேற்றமுடன் காவியமேழாயிரத்தை
மானான வையகத்தோர்
பிழைக்கவென்று மகத்தான சீனபதி மாண்பருக்கு
பானான காண்டமேழாயிரத்தில்
பட்சமுடன் இருமூன்று காண்டமுற்றே
விளக்கவுரை :