6001. தானான பிரகாசமான நந்தி தண்மையுள்ள மனோன்மணியாள் பாதம்போற்றி
கோனான வேல்முருகன்
தாள்பணிந்தேன் கொற்றவனே அரிஅயனும் பதந்தான்போற்றி
மானான வகஸ்தியனார்
பாதம்போற்றி மகத்தான கமலமுனி தாள்பணிந்தேன்
தேனான சதாசிவத்தி
னடிபணிந்தேன் தேற்றமுடன் காலாங்கி பாதங்காப்பே
விளக்கவுரை :
6002. காப்பான பதினெண்பேர்
முனிவர்தானும் பலப்பலவாய்ப் பாடிவைத்தார் நூல்கள்பேதம்
மூப்பான நூல்களுமே
அனேகஞ்சொன்னார் முனையான சித்துமகாரிஷியார்தாமும்
வாப்பான பெருநூலில்
அனந்தஞ்சொன்னார் வளமையுடன் இந்நூல்போல் ஆருஞ்சொல்லார்
தாப்பான நூலிதுதான்
சத்தகாண்டம் தண்மையுடன் பாடிவைத்தார் ஏழாயிரந்தானே
விளக்கவுரை :
[ads-post]
6003. தானான
சத்தகாண்டமேழாயிரத்தில் தண்மையுள்ள காண்டமிது ஏழாங்காண்டம்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே
கூறினேன் வையகத்து வதிசயங்கேள்
தேனான மணிபோல் ஏழாயிரத்தில்
தேற்றமுடன் சொல்லிவைத்தேன் ஏழாங்காண்டம்
மானான கடைக்காண்டம்
நீதிமார்க்கம் மன்னவனே யுந்தமக்காய் ஓதினேனே
விளக்கவுரை :
6004. ஓதினேன் சீனபதி மாண்பருக்கு
வுத்தமனே காண்டமேழாயிரந்தான்
நீதியுடன் சன்மார்க்க
நிலையுஞ்சொன்னேன் நிஷ்களங்கமான தொருவழியுஞ்சொன்னேன்
பாதிமதி சடையணிந்த
தம்பிரான்கள் பாருலகில் செய்ததொரு நூலையெல்லாம்
ஆதியந்த முடியுடனே
பொருளாராய்ந்து வப்பனே சின்மயத்தின் வழிசொன்னேனே
விளக்கவுரை :
6005. சொன்னதொரு பொருள்களெல்லாம்
இதிலடக்கம் சுந்தரனே போகரேழாயிரந்தான்
மன்னவர்கள் வையகத்து
வாழ்க்கையெல்லாம் மார்க்கமுடன் அதிலடக்கஞ் சொல்லொண்ணாது
தென்னவர்கள் தேவாதி
முனிவர்தாமும் தேற்றமுடன் செய்ததொரு நூல்கள்யானும்
பன்னவே திரட்டியல்லோ
பெருநூலாக பாரினிலே வினோதவகை சொல்லிட்டேனே
விளக்கவுரை :