போகர் சப்தகாண்டம் 6006 - 6010 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6006 - 6010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6006. இட்டேனே இதிகாசப் பொருள்களெல்லாம் எழிலான போகரேழாயிரத்தில்
சட்டமுடன் பாடியல்லோ நுணுக்கமாக சாங்கமுடன் செய்துவைத்த பெருநூலப்பா
நட்டமது வாராது இந்நூலப்பா நலமான வேதையிது கோடிக்கோடும்
திட்டமுடன் நாதாக்கள் சொன்னதில்லை தீர்க்கமுடன் சத்தகாண்டம் பண்புதானே

விளக்கவுரை :


6007. பண்பான வறுவகை காண்டத்துள்ளே பலகோடி வேதைமுகம் அனந்தஞ்சொன்னேன்
நண்பான நாதாக்கள் நீதிமார்க்கம் நலமுடனே யாரேனுஞ் சொன்னதில்லை 
திண்பான நீதிவழிக்குறியசித்தை தீர்க்கமுடன் பாடிவைத்தேன் இந்நூலுக்குள்
வன்பான பெருநூல்தான் குருநூலாகும் வண்மையுடன் பாடிவைத்தேன் காண்டமாமே

விளக்கவுரை :

[ads-post]

6008. காண்மாஞ் சத்தகாண்ட மேழாயிரந்தான் காவியங்கள் போலவொரு நூலுமில்லை
பாண்டவாள் வையகத்து மாண்பரெல்லாம் பாங்குடனே சித்துவகை முனிவர்வாழ்க்கை
தாண்டவம்போல் குருநூலேழாயிரத்தில் சாற்றினேன் அறுகாண்டந் தன்னிற்குள்ளே
பூண்டதொரு லோகவதிசயங்களெல்லாம் புகட்டினேன் காலாங்கி கடாட்சந்தானே

விளக்கவுரை :


6009. தானான சத்தகாண்டந் தன்னைப்போலே சாற்றினார் அகஸ்தியனார் முனிவர்தானும்
கோனான பன்னீராயிரந்தானப்பா கொற்றவனே புலஸ்தியருக் குபதேசித்தார்
பானான பனிரெண்டு காண்டஞ்சொன்னார் பாலகனே வாயிரத்துக்கொருகாண்டந்தான்
தேனான மனோன்மணியாள் கிருபையாலே தேற்றமுடன் பாடிவைத்த நூல்தான்பாரே

விளக்கவுரை :


6010. பாரேதான் ஏழுலட்சங் காப்புதன்னை பாலகனே பாடிவைத்தார் அனந்தமாக
நேரேதான் இந்நூலேழாயிரந்தான் நேர்மையுள்ள காண்டமது தன்னைப்போலும்
சீரேதான் அகஸ்தியனார் உண்டுசெய்த சிறப்பான பன்னீராயிரத்தைப்போலும்
ஆரோதான் சொன்னதுண்டோ நூலையப்பா வப்பனே யானுமல்லோ வுரைத்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar