போகர் சப்தகாண்டம் 6011 - 6015 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6011 - 6015 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6011. உரைத்தேனே வெகுநூல்கள் அனந்தங்கோடி வுத்தமனே இந்நூலுக்கொப்பதாமே
கரைத்ததொரு பொருள்களெல்லாம் இதிலடக்கம் காசினியில் கண்டவர்கள் விடுவாரோசொல்
நரைதிரையும் வருவதில்லை இந்நூல்கண்டால் நாதாக்கள்தான்முதலோர் நாணுவார்கள்
சுரையடர்ந்த கரைபோலே யெண்ணவேண்டாம் சுந்தரனே குருநூலாம் மெய்நூலாமே

விளக்கவுரை :


6012. நூலான நூலுக்குள் மார்க்கஞ்சொன்னேன் நுட்பமுடன் மார்க்கமது என்னவென்றால்
பாலான சித்தருக்கு நீதிசொன்னேன் பாங்குடனே யனீதவழி விதியுஞ்சொன்னேன்
சேலான சன்மார்க்கந் துன்மார்க்கந்தான் செப்பினேன் கடைக்காண்டமேழினுள்ளே
மாலான மகுத்துவங்கள் சொல்லொண்ணாது மகத்தான நீதிவழி பாடுகாணே

விளக்கவுரை :

[ads-post]

6013. காணவே சத்தகாண்ட மேழினுள்ளே கருவான கடைக்காண்டம் தன்னுக்குள்ளே
பூணவே சிடிகையென்ற நுணுக்கமப்பா புகட்டினேன் புலிப்பாணி மைந்தாகேளு
ஆணவங்கள் தானொடுங்கி மைந்தாநீயும் வப்பனே சித்தாதி முனிவர்க்கெல்லாம்
நாணலுடன் முடிவணங்கி கரங்குவித்து நாற்பாத கமலமதை வணங்குவாயே

விளக்கவுரை :


6014. வணங்கியே நூலதனைப் பதனம்பண்ணு வகையில்லா கசடருக்கு யீயவேண்டாம்
சுணங்கமெனுங் கழுதையப்பா மாண்பர்தாமும் சுந்தரனே வெகுபேர்கள் இருப்பாருண்டு
கணமுடைய ராட்சதர்கள் தன்னைப்போல கருமிகளும் மெத்தவுண்டு யீயவேண்டாம்
மனங்கமழும் புண்ணியர்கள் தன்னைத்தேடி மகத்தான நூல்கொடுத்தால் புனிதமாமே

விளக்கவுரை :


6015. புனிதமாங் கருமிகட்குக் கொடுத்தாயானால் பூபாலகன் மணியே பாபமெய்தும்
கனிவுடைய புண்ணியர்கள் வெகுபேருண்டு காசினியில் உன்னைவந்து நூல்கேட்டாலே
இனிதான வார்த்தையது மிகவுங்கூறி எழிலான நூலுக்குச் சாபந்தீர்ந்து
தனியாகத் தானழைத்து உபதேசித்து தாரணியில் பிழைக்கும்வகை சொல்லுவீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar