6016. சொல்லவென்றால் நாவில்லைப்
பாவுமில்லை துரைராஜ காலாங்கிநாதர்தம்மை
புல்லவே யவர்தமது
பதாம்புயத்தை போற்றியே எந்நாளும் மனதுவந்து
அல்லதுவிட்டகற்றி யன்புகூர்ந்து
வப்பனே சதாநித்தம் மனதிலுன்னி
வெல்லவே யுபதேசமோதியல்லோ
விருப்பமுடன் நூல்கொடுத்தால் புண்ணியமாமே
விளக்கவுரை :
6017. புண்ணியமாம் இன்னமொரு மார்க்கங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு
மண்ணிலே வெகுகோடி
சித்துதாமும் மகத்துவங்கள் கொண்டதொரு புனிதவான்கள்
நண்ணியதோர் நூல்களெல்லாம்
மிகவுங்கூறி நலமுடனே மறைத்துவைத்தார் அனேகங்கோடி
உண்மையாய் நூலதனைப்பாடியல்லோ
வுத்தமனே மறைத்ததினால் ஒன்றுங்காணே
விளக்கவுரை :
[ads-post]
6018. ஒன்றான சித்துமுனி
ரிஷியைப்போலும் ஓகோகோ நாதாக்கள் தன்னைப்போலும்
குன்றான நூலதனை மிகவும்பாடி
குகைதனிலே மறைத்துவைத்தார் கோடிமாண்பர்
வென்றிடவே வகஸ்தியரும்
மிகவாய்ப்பாடி வெட்டவெளி குகைதனிலே மறைத்துவைத்தார்
தென்றிசையில் சித்தர்களுந்
தாமுமல்லோ தெளியாமல் மலைமீதில் ஒளித்தார்தானே
விளக்கவுரை :
6019. தானான சாத்திரத்தைப்
பாடியல்லோ தண்மையுடன் குகைதனிலே வைத்தாரப்பா
கோனான கும்பமுனி
ரிஷியார்தாமும் கூட்டமிட்டு சாத்திரத்தை மறைத்துவைத்தார்
மானான காலாங்கி நாதர்தாமும்
மார்க்கமுடன் நூலதனைப்பாடியல்லோ
தேனான சீஷவர்க்க மாண்பருக்கு
தேற்றமுடன் நூல்கொடுத்தார் திண்ணமாமே
விளக்கவுரை :
6020. திண்ணமா மின்னமொரு
மார்க்கம்பாரு தீர்க்கமுடன் புலிப்பாணி மைந்தாகேளு
வண்ணமா மேருவுக்கு
வடபாகத்தில் மகத்தான கடலோரங் காட்டகத்தில்
நண்ணவே சிங்கமதை
யானுங்கண்டேன் நாதாக்கள் சித்துமுனி யங்குமுண்டு
திண்ணமுடன் குளிகையது
கொண்டுமல்லோ தீர்க்கமுடன் வனத்தில் இறங்கினேனே
விளக்கவுரை :