6021. இறங்கினேன் வடபாகங்
கடலோரத்தில் எழிலான இருளடைந்த கானகந்தான்
உறங்குமே கரடிபுலி
சிங்கந்தானும் ஓகோகோ நாதாக்கள் மெத்தவுண்டு
திறமுடைய கரிக்கூட்டம்
சொல்லொண்ணாது திரளான வடகோடி கானகத்தில்
குறைவன்றி வாழுமது
மிருகமெல்லாம் கொற்றவனே இமயகிரி வடபாகந்தானே
விளக்கவுரை :
6022. தானான முற்பக்கம்
அரிகள்கூட்டம் தாக்கான பிற்பக்கம் கரிகள்கூட்டம்
கோனான மேற்பக்கம்
பரிகள்கூட்டம் கொற்றவனே கீழ்பக்கம் நரிகள்கூட்டம்
தேனான நடுமையக் கானகந்தான்
தேவிமனோன்மணியாள் அறியாநாடு
மானான பரிதிமதி காணாநாடு
மகத்தான சில்லென்ற காடுதானே
விளக்கவுரை :
[ads-post]
6023. காடான நடுமையங்கானகத்தில்
கரடிபுலி சிங்கமது வாழும்நாடு
தாடாண்மை கொண்டதொரு
தழைத்தநாடு தகமையுள்ள கானகந்தான் சித்தர்நாடு
நாடாளும் ராஜர்பதி
கண்டதில்லை நலமுடனே தேவரிஷி இருக்கும்நாடு
பாடாண்மை கொண்டதொரு
பசுக்கள்நாடு பாரினிலே யாரேனுங் காணார்தாமே
விளக்கவுரை :
6024. காணாரே யவ்வனத்தில்
மகிமைதன்னை கதையுரைப்பேன் புலிப்பாணி மன்னாகேளு
தோணாமல் சித்தர்முனி
ரிஷிகளுக்கும் தொல்லுலகில் கண்டறியா வதிசயங்கள்
நாணாது சிங்கமென்ற
காட்டகத்தை நன்மையுடன் குளிகைகொண்டு சென்றுயானும்
வீணாகக் காலமது கழியாமற்றான்
விருப்பமுடன் சிலகாலமிருந்திட்டேனே
விளக்கவுரை :
6025. இட்டேனே நெடுங்கால மடியேன்தானும் எழிலான காலாங்கி கிருபையாலும்
திட்டமுடன் குளிகைகொண்டு
கானகத்தில் தீர்க்கமுடன் சுற்றிவருங்காலந்தன்னில்
பட்டையம் ஆண்சிங்கம்
பெண்ணைக்கண்டு பாச்சலுடன் மோகமது வதிகமாகி
சட்டமுடன் கலவிதனில்
மிகக்கலந்து சாங்கமுடன் இருக்குமது காலந்தானே
விளக்கவுரை :