போகர் சப்தகாண்டம் 6026 - 6030 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6026 - 6030 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6026. காலமாம் ஆணுடனே பெண்ணுங்கூடி கல்விதனிலிருக்கின்ற நாளுங்கண்டேன்
தாலமாம் பனிரெண்டு வருஷந்தானும் தாக்கான பெண்சிங்கங் கருவுமாகி
கோலமுடன் பூரணமாங் கெற்பங்கொண்டு கொற்றவனே யீனுகிற காலமாச்சு
சாலமது யென்சொல்வேன் மன்னாகேளு சாங்கமுடன் ஒருவருந்தான் கண்டிலாரே

விளக்கவுரை :


6027. கண்டேனே கானகத்தி லதிசயங்கள் கண்கொள்ளா மகிமையது யென்னசொல்வேன்
அண்டர்முனி ராட்சதர்கள் அறியாநாடு யவ்வனத்தில் சிங்கமது கற்பங்கொண்டு
பண்டுபல வஸ்துக்கள் அருந்தியல்லோ பாங்குடனே கெற்பவேதனையுமாகி
அண்டமுடியாமலது சிங்கந்தானும் அவனிதனில் வேதனைகள் படுகலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6028. ஆச்சப்பா வாண்சிங்கந் தானுமல்லோ அரிவையெனும் பெண்சிங்கந்தன்னைக்கண்டு
பாச்சலுடன் யானையது இருக்குங்கூட்டம் பாண்மையுடன் தானறிந்து மனதுவந்து
மேச்சலுடன் பெண்சிங்கந்தன்னைக்கூட்டி மேன்மையுடன் கரிக்கூட்டந்தன்னிலங்கே
மாச்சலது வாராமல் சிங்கந்தானும் மன்னவனே சென்றல்லோ நிற்கலாச்சே

விளக்கவுரை :


6029. நிற்கவே கரிக்கூட்டம் முன்னதாக நேரான சிங்கமது பின்னதாக
விற்பனமாய் முதுகொடுத்து நின்றுகொண்டு வீரமுடன் குட்டியது ஈன்றபின்பு
சொற்பெரிய குட்டியென்ற சிங்கந்தானும் சுந்தரனே மத்தகெஜந் தலையிற்பாய்ந்து
உற்பனமா மூளையது உரிந்துமல்லோ வுத்தமனே சிங்கமது இறங்கும்பாரே   

விளக்கவுரை :


6030. பாரேதான் சிங்கமது இறங்கும்போது பாங்கான கரிக்கூட்டம் நடுங்கியல்லோ
நேரேதான் தலைவாறு திசைமாறிதானும் நேர்மையுடன் கானகத்தைச் சென்றுபோகும்
சீரேதான் சிங்கமென்ற குட்டிதானும் திறளான கரிக்கூட்டம் தன்னிற்சென்று
வீரேதான் நான்குநாள் இரையுங்கொண்டு விடுபட்சி காட்டகத்தே வருகுங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar