போகர் சப்தகாண்டம் 6031 - 6035 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6031 - 6035 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6031. காணவே சிங்கமது பிறவியல்லோ கைலாய நாதருட கடாட்சத்தாலே
தோணவே வையகத்தில் குட்டியீன்று தொல்லுலகில் வாழ்குவது மகிமைமெத்த
ஆணவங்கள் அதிகமுண்டு அரிதனக்கு அவனியிலே ராஜனென்ற மிருகமாச்சு
பூணவே வையகத்தின் மிருகமெல்லாம் புகழான சிங்கத்தின் கீழுமாச்சே   

விளக்கவுரை :


6032. கீழான மிருகமது வனேகமுண்டு கீர்த்தியுள்ள சிங்கமது ராசனப்பா
பாழான காடுகளில் இருக்கும் சிங்கம் பார்த்தவர்கள் ஆரேனும் கண்டதுண்டோ
சாழலுடன் கானாறுதன்னிலப்பா சட்டமுடன் விழுந்திறந்த கதைகேட்டார்கள்
ஆழான மடுக்களிலே விழுந்திறந்த அதிசயங்கள் வையகத்தில் கண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

6033. தாமான யின்னமொரு மார்க்கம்பாரு தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோமானகள் அறிந்ததில்லை குவலயத்தில் கொற்றவனே இன்னமொரு மகிமைசொல்வேன்
சாமானிய மானதொரு சித்தரப்பா சட்டமுடன் அன்பதுபேர் கூட்டமாக
அமானமாகவல்லோ கூட்டங்கூடி அடவான காட்டகத்தில் வந்திட்டாரே

விளக்கவுரை :


6034. வந்ததொரு வழிதனிலே மார்க்கங்கண்டு வண்மையுடன் சிங்கமது கர்ச்சித்தல்லோ
சிந்தனையாய் மாண்பருட சைகைதன்னை சீறலுடன் தானறிந்து கோபமிஞ்சி
தொந்தரவு செய்வதற்கு மனதுவந்து தோற்றமுடன் பாச்சலது வதிகமாகி
விந்தையுடன் சிங்கமது வேவுகொண்ட வீரியத்தை கண்டார்கள் சித்துதாமே  

விளக்கவுரை :


6035. சித்தான சித்துமுனி ரிஷிகள்தாமும் சீறலுடன் வருகின்ற சிங்கந்தன்னை
புத்தியுள்ள சித்துமுனி பார்த்துயேங்கி புகழான வன்பதுபேர் கூட்டத்தோடும்
பத்தியுடன் கல்லாலின் மரத்தின்மேலே பரிவுடனே ஏறியல்லோ பார்க்கும்போது
சுத்தியெங்கும் பார்த்துமல்லோ சிங்கந்தானும் சுந்தரனார் அன்பதுபேர் காணலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar