6036. காணவே சிங்கமது சித்தர்தம்மை
கனதான வீரியத்தால் கோபமிஞ்சி
தோணவே சிங்கமது யேதுசெய்யும்
தோற்றாமல் கோபமது வதிகங்கொண்டு
பாணம்போல் சிறுநீரை
பூமிதன்னில் பள்ளமதாய்ச் செய்துமல்லோ மண்ணைத்தானும்
பூணவே மூத்திரத்தில்
வாலைவிட்டு புகழுடனே மண்ணதனைப் பிரட்டலாச்சே
விளக்கவுரை :
6037. பிரட்டியே வால்தனிலே
மண்ணையேந்தி பின்பக்கமாகவல்லோ திரும்பியேதான்
வாட்டியே வாலதனைத்
தூக்கியேதான் வளமையுடன் மண்ணதனை நோக்கியல்லோ
தூட்டிதயே வால்சுற்றி
யெரியும்போது துப்புரவாய் மண்ணதனை மேலேநோக்கி
மிரட்டியே தானெரிய
மண்தானப்பா மீறியே சித்தரின்மேல் விழுகலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6038. விழுகவே
நாற்பத்தியெண்மர்பேரில் விஷமான மண்ணதுவும் மேலேபட்டு
பழுதுபடா மேனியதில்
விஷமுங்கண்டு பாங்குடனே நித்திரைகள் வந்தாற்போல
நழுகியே சிங்கமது
சென்றபின்பு நடுக்கமுடன் திரேகமது ஒடுக்கமாகி
முழுதுமே நாற்பத்தி
யெண்மர்பேரும் மூதுலக மண்மீதில் விழுந்திட்டாரே
விளக்கவுரை :
6039. மண்ணான பூமிதனில் விழுந்தபோது
மயக்கமுடன் கண்ணுரங்கி யிருந்தாற்போலும்
திண்ணமுடன் மடிந்தார்கள்
சித்தரெல்லாம் தீர்க்கமுடன் வையகத்தைக் கண்டதில்லை
எண்ணயே மரத்தின்மேல்
இருந்தபேர்கள் யெழிலான யிருவருமே யிறங்கியேபின்
குண்ணியே முகம்வாடி
மனமயர்ந்து குவலயத்தில் மடிந்தவரைக் கண்டார்தாமே
விளக்கவுரை :
6040. தானான மண்படாதிரண்டுபேரும்
சட்டமுடன் மரம்விட்டுக் கீழிறங்கி
கோனான சிங்கமது சென்றபின்பு
கொற்றவனே இருவருமே யறிந்துகொண்டு
தேனான மனோன்மணியை மனதிலுன்னி
தெளிவுடனே புத்தியது யதிகமாகி
பானான சித்துமுனி
இருவர்தாமும் பரிட்சிக்க எண்ணமது கொண்டிட்டாரே
விளக்கவுரை :