போகர் சப்தகாண்டம் 6041 - 6045 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6041 - 6045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6041. கொண்டுமே மரத்தடியை விட்டிறங்கி கொற்றவர்கள் சிங்கத்தின்பள்ளங்கண்டு
விண்டிடவே மூத்திரமாம் பள்ளங்கண்டு விருப்பமுடன் சோதனைகள் பண்ணவெண்ணி
கண்டிடவே கரமதனில் இருந்தசெம்பை கட்டழகர் தானெடுத்து மண்ணிற்போட
கொண்டதொரு செம்பதுவுந் தங்கமாச்சு கொற்றவனே யதின்விஷத்தை யறிந்தார்பாரே

விளக்கவுரை :


6042. பாரேதான் விஷமேறி பழுக்கலாச்சு பாங்கான அரியினது மூத்திரந்தான்
நேரேதான் மண்ணதனில் விஷமுமாகி நேர்மையுடன் சித்தரின்மேல் படுகலாச்சு
சீரேதான் தேகமது புண்ணுமாகி தீர்க்கமுடன் தானிறந்தார் சித்தரெல்லாம்
ஆரோதான் கண்டவர்கள் உலகிலில்லை யப்பனே சித்தர்முனி கண்டார்தானே

விளக்கவுரை :

[ads-post]

6043. கண்டாரே சித்துமுனி ரிஷியார்தாமும் கானகத்தில் நடந்ததொரு வதிசயத்தை
தண்டம்போல் தான்கண்டு பிர்மித்தேங்கி தாரணியில் குளிகைகொண்டு சீனந்தன்னில்
வண்ணமுடன் சீனபதி மாண்பருக்கு வளமான வதிசயத்தை யெடுத்துக்கூற
திண்ணமுடன் மனதுவந்து மனங்களித்து தீர்க்கமுடன் சீனபதிக்கேகினாரே

விளக்கவுரை :


6044. ஏகவே யின்னமொரு மார்க்கங்கேளு யெழிலான புலிப்பாணி மணியேபாரு
சாகமுடன் நெடுங்காலம் வடமேருதன்னில் சட்டமுடன் நானிருந்தேன் சிலதுகாலம்
பாகமுடன் சிங்கத்தின் அதிசயத்தை பாரினிலே நாதாக்கள் கண்டதில்லை
வேகமுடன் யான்கண்டு சீனத்தார்க்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்திட்டேனே

விளக்கவுரை :


6045. செய்தேனே வடமேரு தன்னிலப்பா சிறப்பான சிங்கத்தின் மகிமைதன்னை
வெய்யபுகழ் சீனபதி மாண்பருக்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்தேன்யானும்
பையவே யான்கொண்ட காயகற்பம் பட்சமுடன் அவர்களுக்கு கொடுத்தேன்பாரு
துய்யவே சீனபதி மாண்பரெல்லாம் துப்புரவாய் காயாதி கொண்டார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar