போகர் சப்தகாண்டம் 6046 - 6050 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6046 - 6050 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6046. பாரேதான் காயாதி கொண்டபின்பு பாங்கான சீனபதி மாண்பர்தம்மில்  
நேரேதான் சிலதுபேர் ஞானவானாய் நேர்மையுடன் குளிகையது பூண்டுகொண்டு
தீரேதான் வடமேரு கானகத்தில் தீர்க்கமுடன் தான்சென்று காணுதற்கு
வீரேதான் குளிகையது பூண்டுகொண்டு விருப்பமுடன் வடமேருக்கேகினாரே

விளக்கவுரை :


6047. ஏகினார் சிங்கமென்ற காட்டகத்தில் எழிலாக நாதாக்கள் தன்னைப்போலே
பாகமுடன் காயாதி கொண்டுமல்லோ பக்குவமாய் குளிகைவிட்டு கானகத்தில்
சாகமுடன் சிங்கமதைக் கண்டாரங்கே சட்டமுடன் சிங்கமது கெர்ச்சித்தேதான்
வேகமுடன் சீனபதி மாண்பர்தம்மை வீறுடனே கொல்லுதற்கு வருகலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6048. வருகவே சித்துமுனி தம்மைப்போலே வாகான சீனபதி மாண்பரெல்லாம்
பெருகவே கல்லாலின் மரத்தின்மேலே பேரான முன்னிருந்த சித்துபோலே
சொரூபமதைக் கண்டவுடன் மரத்தின்பேரில் சுந்தரனே பார்த்துமல்லோ திகைத்துநின்று
அருவமென்ன சிங்கமதைக் கண்டுமல்லோ வப்பனே பிரமித்து நின்றிட்டாரே

விளக்கவுரை :


6049. நின்றாரே சித்துமுனி ரிஷியார்தாமும் நேரான சிங்கமது கண்டுமேதான்
குன்றிடவே தன்மனதில் வுறுதிகொண்டு கூரான சிங்கமது யேதுசெய்யும்
வென்றிடவே முன்போலே மண்ணைவாரி விட்டெரிய சீனபதி மாண்பரெல்லாம்
தன்றிடவே கல்லாலின் மரத்தின்பேரில் சட்டமுடன் மேலிருந்து விழுந்தார்தாமே

விளக்கவுரை :


6050. தாமான சீனபதி மாண்பரெல்லாம் தகமையுடன் மண்ணதனில் விழுந்துமேதான்
பூமான்கள் விஷமதுவும் சகியாமற்றான் புகழான தேகமது சிலிர்த்துமல்லோ
நாமான பஞ்சேந்திரியம் உள்ளடங்கி நமனுக்கு ஆளாகி பொறிகலங்கி
வேமான மாகவல்லோ மண்ணின்பேரில் விழுந்துமே பிரண்டிருக்கக் கண்டிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar