6051. கண்டேனே சீனபதி மாண்பர்தம்மை
கடுகெனவே விஷமேறி யிருந்தபேர்க்கு
தண்டகம்போல் காயாதி
முறிப்புயானும் தகமையுடன் தான்கொடுத்து யெழுப்பியல்லோ
மண்டலங்கள் உள்ளளவும்
சிங்ககற்பம் மடியாமல் இருப்பதற்கு மனதுவந்து
விண்டவே யான்கொடுத்து
உயிர்கொடுத்தேன் விட்டகுறை இருந்ததினால் எழுந்தார்பாரே
விளக்கவுரை :
6052. பாரேதான் சீனபதி மாண்பருக்கு
பாங்கான கற்பமுறை யானுஞ்சொல்லி
நேரேதான் பிழைப்பதற்கு
வழியுஞ்சொன்னேன் நேர்மையுடன் கருவாளி கண்டுகொள்வார்
சீரேதான் சித்தர்முனி
மார்க்கந்தன்னை சிறப்புடனே யானுரைத்தேன் மாண்பருக்கு
வேரேதான் மற்றோரால்
சொல்லப்போமோ வேதாந்த காலாங்கி கடாட்சந்தானே
விளக்கவுரை :
[ads-post]
6053. தானான சீனபதி மாண்பரெல்லாம்
தகமையுடன் தானெழுந்து முடிவணங்கி
கோனான காலாங்கி கடாட்சத்தாலே
கொற்றவனார் சீனபதி மாண்பரெல்லாம்
பானான விட்டகுறை
இருந்துமல்லோ பாங்குடனே என்னாலே எழுப்பப்பட்டார்
மானான மகதேவர் கடாட்சத்தாலே
மறைபொருளை யானுமல்லோ உணர்ந்திட்டேனே
விளக்கவுரை :
6054. உணர்ந்தேனே யின்னமொரு
மார்க்கம்பாரு வுத்தமனே புலிப்பாணி மைந்தாகேளு
மணங்கமழும் வடகோடி
கானகத்தில் மார்க்கமுடன் மகமேரு பக்கந்தன்னை
கணமுடனே யனேகவித
தெய்வந்தானும் காட்டகத்தே வாசமது செய்துகொண்டு
பிணமதனை யாபூதி கொள்ளுங்காளி
பேரான காட்டகத்தை கண்டேன்தானே
விளக்கவுரை :
6055. தானேகேள் அண்டமுனி
யறியாக்காடு தகமையுள்ள வனந்தனிலே திரிந்துயானும்
மானேகேள் மகமேரு சாரல்பக்கம்
மகத்தான குண்ணுகளும் மலையுமுண்டு
தேனான மலைதனிலே
வாசஞ்செய்யும் தேளதுவுந் திரள்கூட்டஞ் சொல்லொண்ணாது
கோனான தேளதுவின்
கூட்டந்தன்னை தேற்றமுடன் கோடிவரை யான்பார்த்தேனே
விளக்கவுரை :