போகர் சப்தகாண்டம் 6056 - 6060 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6056 - 6060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6056. பார்த்தேனே செந்தேளாம் கோடிவர்க்கம் சாங்கமுடன் யுகம்பிரித்து நடக்கும்போது
தீர்த்தலிங்கந் தனிலுதித்த செந்தேளப்பா தீரமுடன் கோடிதளம் வருகும்போது
ஆர்த்தியுடன் மேலேறி வருகுந்தேளாம் வப்பனே உச்சிலிங்கத்தேளேயாகும்
மூர்த்தியுடன் மும்மூர்த்தியானபேரும் மூதுலகில் நடுங்குவது திண்ணமாமே

விளக்கவுரை :


6057. திண்ணமாம் உச்சிலிங்கத் தேன்தானப்பா தீர்க்கமுடன் காட்டகத்தே இருக்கக்கண்டேன்
வண்ணமுடன் மலைசாரல் காளிகோயில் வளமான தேவதாஸ்தலமுங்கண்டேன்
எண்ணரிய கோயிலது மூலஸ்தானம் யெழிலாக வால்நுழைய இடமுமுண்டு
கண்ணமுடன் காளிதனைக் காணவென்றால் சாங்கமுடன் சுரங்கவழி செல்வார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6058. பாரேதான் தேவதா ஸ்தலத்துக்குள்ளே பாங்கான வழியதுவும் மூலஸ்தானம்
நேரேதான் காளிதனைக் காணவென்றால் நேர்மையுடன் மார்பாலே நகர்ந்துமல்லோ
தீரேதான் எண்சாணு விடமுந்தாண்டி தீர்க்கமுடன் காளிதனைக் காணலாகும்
கூரேதான் அதற்கப்பால் காளிவாசம் கொற்றவனே தானிருக்கக் காணலாமே

விளக்கவுரை :


6059. காணலாம் உச்சிலிங்கத் தேள்தானப்பா கடியதொரு சுரங்கமதில் வாசஞ்செய்து
பூணவே நெடுங்காலம் வாசஞ்செய்து பொங்கமுடன் இருக்குமந்த காலந்தன்னில்
நீணவே யவ்விடத்தில் கரிக்கூட்டங்கள் நீதியுடன் சொல்லுதற்கு லக்கோயில்லை
ஆணவங்கள் மிஞ்சியல்லோ யானைக்கூட்டம் வப்பனே கணக்குண்டோ சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


6060. ஒண்ணாது காட்டகத்தே கோனான்தானும் வுத்தமனே மாடாடு மேய்க்கும்ஸ்தானம்
அண்ணார்ந்து பார்ப்பதற்கு முடிகொள்ளாது வப்பனே பசுக்கூட்டம் மெத்தவுண்டு
கண்ணாலே யானையது கோனான்தன்னை கடைநோக்கிப்பார்த்தல்லோ சீறலாகி
மண்ணோடே தும்பிக்கையாற்புரண்டி மகத்தான கோனானைத் துறத்தலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar