போகர் சப்தகாண்டம் 6061 - 6065 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6061 - 6065 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6061. ஆச்சப்பா கரியல்லோ கோனானைத்தான் வப்பனே துரத்துகின்ற வேளைதன்னில்
பாச்சலுடன் கோனானும் ஓட்டங்கொண்டு பதுங்கியே செல்வதற்கு காளிகோயில்
மூச்சடங்கி யோடியல்லோ தேவஸ்தானம் முனையான காளியது மூலஸ்தானம்
மாச்சலது வருவதற்கு முன்னதாக மகத்தான சுரங்கவழி சென்றான்தானே

விளக்கவுரை :


6062. சென்றாரே கோனானுங் காளிபக்கல் செம்மலுடன் பதுங்கியல்லோ மூற்புறத்தில்
நின்றாரே கோனானும் உடல்நடுங்கி நீதியுடன் காளிபுறம் தன்னில்நிற்க
குன்றேறி வாழுகின்ற யானையப்பா கொற்றவனே சுரங்கம் வழி வருகலாச்சு
வென்றிடவே யானையது தும்பிக்கையால் வீரமுடன் சுரங்கமது நுழையலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6063. நுழையவே சுரங்கத்தின் வழியிலப்பா துண்மையுடன் தும்பிக்கைவிட்டுமல்லோ
குழையவே தேகமது செல்லாமற்றான் கொற்றவனே யானையது நின்றுகொண்டு
தழைமேய்க்கும் கோனானைத் தும்பிக்கையால் தட்டாமல் நாற்புறமும் தடவும்போது
நுழையவே கதிதனக்கு இடமுமில்லை நுட்பமுடன் இடையூறு நேரலாச்சே

விளக்கவுரை :


6064. ஆச்சுதே தும்பிக்கையாலேதானும் வப்பனே கோனானைத்தேடும்போது
மூச்சடங்கித் தானிருந்து கோனான்தானும் முனையான காளியின்மேல் சிந்தையாகி
மாச்சலது வாராமல் இருந்துகொண்டான் மகத்தான யானையுந்தன் தும்பிதன்னை
வீச்சலுடன் உச்சிலிங்கத் தேள்தானப்பா வீரமுடன் கொட்டிடவே சத்தமாமே

விளக்கவுரை :


6065. சத்தமது கொண்டிடவே யானைதானும் சதுரான மலைதனிலே கேட்கும்போது
முத்திபெறும் சித்தர்களின் கூட்டத்தார்கள் முனையான சத்தமதைக் கேட்டுமேதான்
புத்தியுடன் யானையது தன்னையல்லோ புகழான வுச்சிலிங்கத் தேள்தானப்பா
வெத்தியுடன் கொட்டியதோர் தேள்தானென்று வீரமுடன் சித்தர்களும் அறிந்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar