போகர் சப்தகாண்டம் 6066 - 6070 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6066 - 6070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6066. அறிந்தாரே வுச்சிலிங்கத் தேள்தானப்பா வப்பனே கரிதனையே கொட்டிட்டென்று
செறிந்துமே மலைதனையே விட்டிறங்கி செம்மலுடன் யானையது பக்கல்வந்தார்
குறி யான யானையது விஷமுமேறி கொப்பெனவே நெருப்பதுபோல் எரியுதங்கே
முறியுடனே தந்தமெல்லாம் பற்றியல்லோ முனையான கொழுந்துவிட்டு எரியலாச்சே

விளக்கவுரை :


6067. எரிந்துமே பிரிதிவென்ற சாம்பலாச்சு எழிலான யானையது மடிந்துபோச்சு
சொரிந்ததொரு சாம்பல்தன்னை சித்தர்கண்டு சோராமல் அவரவர்கள் பங்குவீதம்
புரிந்துமே பங்கதுவும் பகரும்போது புகழான கோனானும் சுரங்கத்தண்டே
வரிந்துமே கோனானை சித்தர்கண்டு வகையுடனே வளப்பமதைக்கேட்டிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6068. கேட்டவுடன் கோனானும் மனம்நடுங்கி கெவனமுடன் சித்தர்கட்கு கூறலுற்றான்
வாட்டமுடன் மாடாடு மேய்க்கும்போது வளமான யானையது என்னைக்கண்டு
தாட்டிகமாய்ச் சீரலது மிகவுண்டாகி சட்டமுடன் எந்தனையும் துரத்தலாச்சு
கோட்டமுடன் யானையது வருகும்போது கொப்பெனவே யான்பயந்து ஓடினேனே

விளக்கவுரை :


6069. ஓடினேன் தங்குதற்கு இடமில்லாமல் ஓகோகோ நாதாக்கள் முனிவரேகேள்
தேடியே காளியது தேவஸ்தானம் தேற்றமுடன் யான்கண்டு மனதுவந்து
வாடியே சுரங்கமது வழியிற்சென்று மகத்தான காளியின்தன் பக்கல்நின்றேன்
நீடியே யானையது எந்தனைத்தான் நிஷ்களங்கமாகவல்லோ தேடலாச்சே

விளக்கவுரை :


6070. ஆச்சையா சித்துமுனி ரிஷியாரேகேள் ஆங்காரமுள்ள தொருயானைதானும்
மூச்சடங்கித் தும்பிக்கை தன்னினாலே முனையான சுரங்கத்தின் வழியினுள்ளே
பாச்சலுடன் தும்பிக்கை விட்டபோது பாழான சுரங்கமதில் மகிமையேதோ
கூச்சலுடன் வீரிட்டு யெறிந்துமேதான் கொப்பெனவே பரிதிவென்ற சாம்பலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar