6071. சாம்பலாய்ப் போனதொரு
சேதிகண்டு சட்டமுடன் சுரங்கமது வுள்ளிருந்து
தீம்புகளும் நேராது
யென்றுசொல்லி தீர்க்கமுடன் வெளியரங்கம் வந்தேனென்றான்
வீம்புடைய கோனானின்
வார்த்தைதன்னை விருப்பமுடன் சித்தர்முனி கேட்டுவந்து
நாம்யிவனுக்கோருதவி
செய்யவென்று நலமுடனே சித்தரெல்லாம் நினைத்திட்டாரே
விளக்கவுரை :
6072. நினைத்துமே வுச்சிலிங்கத்
தேளினாலே நிஷ்களங்கமானதொரு திரவியங்கள்
சுனைபோல ஏமமென்ற
தங்கந்தானும் துப்புரவாய் நந்தமக்கு வாய்த்துதென்று
சுனையான கோனானால்
வந்தபாக்கியம் காசினியில் சதகோடி சொல்லொண்ணாது
பனையளவு பாக்கியமும்
இவனாலாச்சு பட்சமுடன் சித்தர்முனி எண்ணினாரே
விளக்கவுரை :
[ads-post]
6073. எண்ணியே சித்தர்முனி மனதுவந்து எழிலான கோனானைத் தானழைத்து
பண்ணவே ஏமமென்ற வித்தைதன்னை
பட்சமுடன் இவனுக்கோர் பாகமீய்ந்து
வண்ணமுடன் செய்பாகம்
கைபாகங்கள் வளமையுடன் காண்பித்து விதியுஞ்சொல்லி
சுண்ணமென்ற சாம்பல்தனை
யோர்பாகந்தான் சுத்தமுடன் கைகொடுத்து போவென்றாரே
விளக்கவுரை :
6074. போமென்று சொல்லியல்லோ
முனிவர்தானும் பொங்கமுடன் கோனானுக்குறுதிகூறி
நாமென்ற காலாங்கி வாக்குபோலே
நலமுடனே ஞானோபதேசஞ்செய்து
தாமென்ற பிரிதிவியாஞ்
சாம்பல்தன்னை சட்டமுடன் தான்கொடுத்து மதியுஞ்சொல்லி
வேமென்ற காட்டகத்தே
சித்தர்தாமும் வேகமுடன் குகைதனிலே சென்றிட்டாரே
விளக்கவுரை :
6075. சென்றவுடன் கோனானும்
சாம்பல்தன்னை செம்மலுடன் அவர்பதிக்குக் கொண்டுசென்று
பொன்னான மாற்றதுவும்
செம்பிலேற புகழான செம்பதுவுந் தங்கமாச்சு
மன்னவனைப் போலாகக்
கோனான்தானும் மகதேவர் சித்தர்முனி தம்மைப்போலும்
தென்னகரி ராமருட
செல்வம்போலும் திரளான கோடிவரை பார்த்திட்டானே
விளக்கவுரை :