6076. பார்த்தானே சித்தருட
மகிமைதன்னால் பாங்கான யேமமென்ற வித்தைதன்னை
கீர்த்தியுடன் முறைசெய்த
தபோபலத்தால் சீர்பெற்றான் கோனானுஞ் சித்துதம்மால்
பேர்பெற்றான் கோனானுங்
காட்டகத்தில் பேருலகில் விட்டகுறை இருந்துதன்னால்
தார்வேந்தர் மெச்சிடவே
தரணிதன்னில் தாமுமொரு சிவயோகி போலானானே
விளக்கவுரை :
6077. ஆனான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி புத்திவானே
கோனான கதையுரைத்தேன்
மகிமையல்ல கொற்றவனே யின்னமொரு மகிமைசொல்வேன்
தேனான தேவிமனோன்மணியாள்பாதம்
தேற்றமுடன் யான்வணங்கி காதைசொல்வேன்
பானான காலாங்கி நாதர்பாதம்
பட்சமுடன் யான்வணங்கி பகருவேனே
விளக்கவுரை :
[ads-post]
6078. பகருவேன் புலிப்பாணி
மன்னாகேளீர் பாரினிலே குளிகைகொண்டு சித்தியேதான்
நிகரமுடன் வையகத்து
வதிசயத்தை நீதியுடன் யான்கண்டு மலையிற்றேடி
சிகரமது சதுரகிரி மலையிலப்பா
சிறப்புடனே யானிறங்கி இருக்குங்காலம்
நிகரமுடன் கிரிதனையே
சுத்தியல்லோ நீடூழி காலம்வரை திரிந்திட்டேனே
விளக்கவுரை :
6079. திரிந்துமே மலையோரம்
தன்னிற்சென்று தீர்க்கமுடன் யான்காணும் வேளைதன்னில்
புரிந்துமே சிகரமது
கிரியில்நின்று புகழான பனையளவு சித்துதாமும்
தெரிந்துமே மலையைவிட்டு
கீழிறங்கி சிறப்புடனே மாண்பர்களைக் காணும்வண்ணம்
செரிந்துமே மகிமையது
கோடியுண்டு தேசமதில் விதியுள்ளான் காண்பார்பாரே
விளக்கவுரை :
6080. பாரேதான் இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி மன்னாகேளு
ஆரோதான் பொதிமாட்டுக்
காரரப்பா ஆயிரம்பேர் ஒருகூட்டமாகக்கூடி
தேரோடும் பாவனைப்போல்
மாண்பரெல்லாம் தேற்றமுடன் மலையோரஞ் செல்லும்போது
சீரோடும் புகையிலையின்
பொதிகைதன்னை சிறப்பான சித்துமுனி கண்டிட்டாரே
விளக்கவுரை :