போகர் சப்தகாண்டம் 6081 - 6085 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6081 - 6085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6081. கண்டாரே புகையிலையின் வாசந்தன்னை பாங்கான பனையளவு சித்துதானும்
கொண்டதொரு புகையிலையின் எண்ணமப்பா கொற்றவனே மயக்கமது மிகவுண்டாகி
எண்ணமுடன் புகையிலையின் கற்கந்தன்னை ஏற்றமுடன் புகைபிடிக்க மனதயர்ந்து
வண்ணமுடன் மலையைவிட்டுக் கீழிறங்கி வளமுடனே வருவதற்கு எண்ணினாரே

விளக்கவுரை :


6082. எண்ணியே சித்துமுனி ரிஷியார்தாமும் எழிலான கிரியைவிட்டு இறங்கும்போது
நிண்ணதொரு பனமரம்போல் தோற்றமாச்சு நிஷ்களங்கமாகவல்லோ இறங்கும்போது
தண்ணமுடன் மேற்பதியை விட்டுமல்லோ தாழவே படிபடியாய் இறங்கும்போது
புண்ணியனார் சித்துமுனி ரிஷியார்தாமும் புகழுடனே இறங்கிவரக் குறைவானாரே

விளக்கவுரை :

[ads-post]

6083. குறைவான ரோமமென்ற கரடிபோலும் கொற்றவனே சித்துமுனி ரூபங்கண்டார்
திரையான பொதிமாட்டுக் காரரெல்லாம் தீர்க்கமுடன் சித்துமுனி இறங்கும்நேர்மை
மறைவாக வான்ரூபங் குறைந்துகாணும் மகத்தான மகத்தான ரோமமது தெரியவில்லை
முறையான மகுத்துவத்தை எண்ணாமற்றான் மூர்க்கமுடன் சித்துதமை வசனிப்பாரே

விளக்கவுரை :


6084. வசனிக்கப் பொதிமாட்டுக் காரரரெல்லாம் வளமையுடன் ஒருவருக்கொரு வமைகூறி
நிசமுடைய பனையளவு சித்துபோலும் நீதியுடன் சித்துதம்மை மதியாமற்றான்
புசமுடைய தேவாதி சித்துதம்மை புகழான மகுத்துவங்கள் எண்ணாமற்றான்
கசம்போன்ற ஆயிரம்பேர் மாண்பரெல்லாம் கட்டாக ஒருவருக்கோர் பேசுவாரே 

விளக்கவுரை :


6085. பேசுவார் மலையைவிட்டு இறங்குஞ்சித்தை பேரான மகுத்துவங்கள் அறியாமற்றான்
காசுபணமில்லாத சித்துவென்றும் கருவான சதுரகிரி யிருக்குமாண்பன்
வீசுபுகழ் மகுத்துவங்கள் இல்லாரென்றும் வீரமுடன் ஒருவருக்கோருகந்துபேசி
ஆசுகவிபோலாக வார்த்தைகூறி வப்பனே சம்வாதம் செய்வார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar