6086. தானான பொதிமாட்டுக்
காரரெல்லாம் தகமையுடன் ஒருவருக்கோர்வாதுகூறி
கோனான குருவென்று
மதியாமற்றான் கொற்றவனே கும்பலது மிகவுங்கூடி
கோனான புகையிலையின்
பொதிகைதன்னை தேற்றமுடன் தானிறக்கி யமுதுகொள்ள
மானான சாவடியாங்
கிரியோரந்தான் மகத்தான அமுதுகொள்ள நண்ணுவாரே
விளக்கவுரை :
6087. நண்ணியே யேகாந்த
கூட்டந்தன்னில் நலமுடனே தானிருக்கும் வேளையப்பா
திண்ணமுடன் கிரிதனிலே
இருந்தசித்து தீர்க்கமுடன் மாண்பருட கூட்டந்தன்னில்
தண்மையாய் பொதிமாட்டுக்
காரர்தன்னை தகமையுடன் சித்துமுனி யருகிற்சென்று
உண்ணவே புகையிலையின்
கற்பமப்பா வுத்தமனே எனக்கருளு மென்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
6088. என்றுமே ஏதுரைத்தார்
முனிவர்தாமும் யெழிலான மாண்பர்களின் முகத்தைநோக்கி
குன்றுமேல் சித்துமுனி
யொருவருண்டு குவலயத்தில் ஒருநாளும் வருவதில்லை
இன்றுமுதல் காற்றினது
வாடையாலே எழிலான புகையிலையின் வாசமப்பா
வென்றிடவே யவர்தமக்குக்
காணலாச்சு விட்டகுறை இருந்ததினால் கிடைக்கலாச்சே
விளக்கவுரை :
6089. ஆச்சப்பா பொதிமாட்டுக் காரர்பாலா வப்பனே எந்தனுக்கு மனதுவந்து
மூச்சடங்கித் தானிருக்கும்
சித்துதானும் முனையான வனத்துரிஷிமுனிவருக்கு
பாச்சலென்ற புகையிலையின்
கற்பமப்பா பட்சமுடன் நீரவர்க்குத் தருவீரானால்
மாச்சலென்ற வினையகலு
முந்தனுக்கு மகயோக புண்ணியமது கிட்டும்பாரே
விளக்கவுரை :
6090. பாரேதான் என்றலுமே
யோகிதானும் பாங்குடனே சித்துமுனி நாதருக்கு
சீரேதான் புகையிலையின்
கற்பந்தானும் சிறப்புடனே யாங்களது கொடுப்போமானால்
நேரேதான் உம்மாலே மகிமையென்ன
நேர்மையுடன் எந்தமக்குக் கூறுமென்றார்
தீரேதான் சித்துமுனி
ரிஷியார்தாமும் சிறப்புடனே மனதுவந்து கூறுவாரே
விளக்கவுரை :